(இராஜதுரை ஹஷான்)
கட்டாய பாடங்களில் ஒன்றை குறைத்து விட்டு, நேரத்தை ஐந்து நிமிடத்தால் அதிகரிப்பது எவ்வாறு கல்வி மறுசீரமைப்பாக அமையும். இதனை சில்லறைத்தனமானதொரு செயற்பாடு என்று குறிப்பிட வேண்டும். கல்வி மறுசீரமைப்பை சட்ட உருவாக்கத்தின் ஊடாகவே அமுல்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு அவசியம் என்பதொன்று இருக்குமாயின் நாம் சமர்ப்பித்த உத்தேச உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலத்தை சட்டமாக்கலாமென முன்னாள் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
உத்தேச கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார் அவர் மேலும் தெரிவித்ததாவது,
உத்தேச கல்வி மறுசீரமைப்பை அரசாங்கம் அமுல்படுத்த முனைகிறது. உண்மையில் இது மறுசீரமைப்பா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. 6 கட்டாய பாடங்களின் எண்ணிக்கையை 5 ஆக குறைத்தல், 45 நிமிட பாடவேளையை 50 நிமிடமாக அதிகரிப்பதை எவ்வாறு கல்வி மறுசீரமைப்பு என்று குறிப்பிடுவது.
புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் அது சட்டத்தின் ஊடாக இயற்றப்பட வேண்டும். உத்தேச கல்வி மறுசீரமைப்புக்கு அரசாங்கம் ஏதேனும் சட்டமூலங்களை தயாரித்துள்ளதா, ஏதுமில்லை. அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு சில்லறைத்தனமானது என்றே குறிப்பிட வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்புக்கான பணிகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலத்தை சமர்ப்பித்து அப்போதைய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளித்தேன்.
உயர் கல்வி ஆணைக்குழு சட்டமூலம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டம் ஒன்றை இயற்றி தான் புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தால் புதிய சட்டத்தை இயற்ற முடியாவிடின் நாங்கள் சமர்ப்பித்த உயர்கல்வி ஆணைக்குழு சட்டமூலம் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளது. அதனை சட்டமாக்கலாம் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM