வீட்டில் ஏற்றி வழிபட வேண்டிய தீப வழிபாடு..?

Published By: Digital Desk 2

19 Jul, 2025 | 05:11 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் மூத்த குடி மக்களிடமிருந்து எதனையும் கற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதிலும் ஆன்மிகம் சார்ந்த விடயங்களில் எம்முடைய மூத்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எந்த வழிகாட்டுதலையும் பெறுவதை விரும்புவதில்லை.

அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு, அதனையே பின்பற்றுகின்றனர். இந்நிலையில் நாம் வாழும் வீட்டில் ஏற்றி வழிபட வேண்டிய தீப வழிபாடு குறித்து எம்முடைய முன்னோர்கள் பல குறிப்புகளை வழங்கி உள்ளனர். இதனை முழுமையாக தெரிந்து கொண்டு கடைபிடித்தால் வீட்டை அற்புதமான ஆற்றல் நிரம்பிய இடமாக மாற்றி வாழ்க்கையில் வெற்றியை பெற்று முன்னேற இயலும்.

* காமாட்சி விளக்கு- அஷ்டலட்சுமி விளக்கு -குத்துவிளக்கு -அகல் விளக்கு- என விளக்குகளில் பல வகை இருந்தாலும் எம்முடைய வீட்டின் பூஜை அறையில் காமாட்சி விளக்கை இடம்பெறச்  செய்ய வேண்டும்.

* குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என விரும்பினால் காமாட்சி விளக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* ஒருமுக தீபத்தை ஏற்றுவதை விட பஞ்சமுக தீபம் ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரும்.

* வீடுகளில் உள்ள விளக்கில் சுத்தமான பருத்தியாலான நூலை கொண்டு தயாரிக்கப்பட்ட திரியை தான் பாவிக்க வேண்டும்.

" மஞ்சள் வண்ணத்திலான திரி அல்லது வெள்ளை வண்ணத்திலான திரி என இரண்டு திரிகளை மட்டுமே பாவிக்க வேண்டும்.

* விளக்கினை தானியங்கள் கொண்ட சிறிய அளவிலான தட்டின் மீது வைத்து தான் ஏற்ற வேண்டும்.

* அகல் விளக்காக இருந்தாலும் தரையில் அதாவது விளக்கு நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வைத்து ஏற்றக்கூடாது. ஏனெனில் இதனால் விளக்குகளின் மூலமாக கிடைக்கும் பலன்களை பூமாதேவி கிரகித்து விடுவார்.

* விளக்குகளை கிழக்கு திசை பார்த்து ஏற்றுவது தான் உத்தமம்.

* காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் எம்முடைய பூஜை அறையில் உள்ள விளக்குகளை ஏற்ற வேண்டும்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01
news-image

பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் எப்போது எழுத...

2026-07-01 16:04:37
news-image

தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை!

2026-06-30 17:14:14
news-image

ஜுலை மாத ராசி பலன்கள் -...

2026-06-30 15:40:37