காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி?

19 Jul, 2025 | 04:29 PM
image

காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி என்று பார்போம்.......... 

தேவையான பொருட்கள்

  • காலிஃபிளவர் - 1 
  • கடலை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/2 கப்
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • உப்பு - 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • வெங்காயம் - 1
  • தண்ணீர்
  • எண்ணெய்

செய்முறை

1.முதலில் ஒரு காளிபிளார் சின்ன சின்னதா நறுக்கி

சூடான தண்ணீரில் இரன்டு நிமிடம் போட்டு எடுக்கவும்.

2. ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு,

மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு. தனியா தூள், கரம்

மசாலா தூள், பெருங்காய தூள், நறுக்கின ரெண்டு பச்சை

மிளகாய், கருவேப்பிலை , இஞ்சி பூண்டு விழுது,

நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும்.

3. மாவை தேவையான தண்ணீர் ஊற்றி கலந்து

கொள்ளவும்.

4. சுடுதண்ணீரில் போட்டு எடுத்த காளிபிளார் , சிட்டிகை

சோடா உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

5. ஒரு கடாயில் பொறிக்க தேவையான எண்ணெய்

ஊற்றி, எண்ணெய் சூடானதும் , கலந்து வைத்த

காளிபிளார் மெதுவாக போட்டு பொன்னிறமாக

பொரிக்கவும்.

6. இதே முறையில் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.

7. பொறித்த பக்கோடாவை ஒரு சேர்விங் டிரே யில்

மாற்றி மேல பொறித்த பச்சைமிளகாய், பொறித்த

கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right