திருகோணமலையில் முக்கிய சந்திகளில் சமிக்ஞை விளக்குகள் அமைக்க வேண்டும் : குகதாசன் எம்.பி. வலியுறுத்தல்

19 Jul, 2025 | 11:48 AM
image

திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச்  சந்தி, மரத்தடிச் சந்தி, பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபைச்  சுற்றுவட்டச் சந்தி, துறைமுக பொலிஸ் நிலையச் சந்தி ஆகியவற்றில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (18) மாலை பிரதேச செயல மண்டபத்தில் இடம் பெற்றது அதன் போது தனது பிரேரனைகளை முன்வைத்தார்.

குறித்த பிரேரனையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

திருகோணமலை பொது மீன் சந்தைப் பகுதியில் இருந்து மூன்றாம் கட்டை (3rd Mile Post) வரையான கடற் பகுதியில் உள்ள மீன்பிடி படகுகள் மாரி காலத்தில் கடற் பெருக்கினால்  கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது. இது மீனவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. 

இதனை தடுக்கும் வகையில் கடலோரத்தில் வள்ளங்கள் நிறுத்தக்கூடிய வகையில் அடுக்குமாடி படகு தரிப்பிடம் ஒன்றினை அமைக்க  வேண்டும். 

வாகன ஓட்டுநர்களின் நன்மை கருதிக்  கன்னியாப் பகுதியில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்க பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு ஒப்புதல் அளிக்கவும் வேண்டும்.  

கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளை பராமரிக்கும் பொறுப்பு நெடுங்காலமாகப் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் இருந்தது. 

இடைக்காலத்தில் இப்பொறுப்பு  தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அதனை மீளவும் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் ஒப்படைக்க  செய்ய வேண்டும்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் கீழ் உள்ள வீதிகளில் இரவு நேரங்களில் வெளிச்சம் இன்மை காணப்படுகின்றது.

இதனால் மக்கள் மிகவும் இடர் படுகின்றனர். எனவே இவ்வீதி விளக்குகளைப்  பொருத்த பிரதேச சபைக்கு நிதி வழங்க  வேண்டும்.

அன்புவழிபுரம் ,செல்வநாயகபுரம்,வரோதயநகர் ஆகிய  கிராமங்களில் வதியும் மக்கள் குடிநீரைப் பெறுவதில்  இன்னல் படுகின்றனர். 

இச்சிக்கலை தீர்க்கும் பொருட்டாக இந்த மூன்று கிராமங்களுக்கும் நீர் வழங்கும்  வகையில் ஒரு நீர்த்தொட்டி அமைக்க  செய்ய வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் இலங்கை சாரணர் இயக்கப்...

2026-09-11 10:18:13
news-image

சட்டவிரோத துப்பாக்கி, எறும்புண்ணி பாகங்களுடன் மூவர்...

2026-09-11 10:15:44
news-image

டிசம்பர் - ஏப்ரல் வரை மழைவீழ்ச்சி...

2026-09-11 10:11:35
news-image

பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக...

2026-09-11 10:12:07
news-image

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி பருத்தித்துறையில்...

2026-09-11 10:11:03
news-image

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார்...

2026-09-11 09:48:26
news-image

'ஷிரான் பாசிக்கின் சகாவுக்குச் சொந்தமான 10...

2026-09-11 09:51:57
news-image

யோஷிதவுக்கு எதிரான வழக்கு : பொய்...

2026-09-11 09:33:27
news-image

புலத்சிங்கள பகுதியில் புதையல் தோண்டிய மூவர்...

2026-09-11 09:43:21
news-image

மஹியங்கனையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2026-09-11 09:43:29
news-image

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ.1,104 மில்லியன் பெறுமதியான...

2026-09-11 09:33:58
news-image

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: விசாரணைக்கு 03...

2026-09-11 08:56:14