அவுஸ்திரேலியாவில் 12 ஆவது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு

Published By: Vishnu

19 Jul, 2025 | 06:26 AM
image

கடந்த 11 ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு அவுஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் அனுசரணையுடன் 12 வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வர்த்தக ஆணையங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரங்கம் அமைத்து காட்சிப்படுத்த உள்ளனர். 

இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நம் தமிழர்கள் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மேம்பாடு, வர்த்தகம் போன்ற துறைகளில் மேம்படவும் எந்த நாட்டில் என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறியும் வகையில் வர்த்தக கண்காட்சி, பிஸ்னஸ் மீட், வர்த்தக கருத்தரங்கம், போன்றவற்றை உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், தொழில்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து துறை சார்ந்த அரங்கங்களும் வல்லுனர்களும் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். 

தொடர்புக்கு +6016167708 என்ற எண்ணிலும் இலங்கையிலிருந்து வர்த்தகர்கள் கலந்து கொள்ள ஏதுவாக இவ்வமைப்பின் ஊடகத் தொடர்பாளர் தியாகு, ‪+94777757815‬ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செல்வக்குமார் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44