பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி நோக்கங்களை முன்னெடுத்து வருவதை நோக்கமாகக் கொண்ட கொழும்புத் திட்டம், இன்றுடன் தனது 74 ஆண்டு சாதனைகளை மீட்டுப் பார்வையிடுகிறது. இந்த சிறப்புநாளில், இலங்கை அரசாங்கத்தையும், அதன் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றும் வாய்ப்பை பெருமையுடன் ஏற்கிறேன். கொழும்புத் திட்டத்தின் உறுதியான பணிக்குத் தங்களை வாழ்த்தி, தொடர்ந்து பயனுள்ள ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்குடன், கடந்த வரலாற்றையும் எதிர்காலக் காட்சியையும் இந்த உரை தன்னகத்தே கொண்டுள்ளது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது;
கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்நாளில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பாக தங்களிடம் உரையாற்றுவது குறித்து பெருமிதம் கொள்கிறேன். இம்முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காகவும், பல தசாப்தங்களாக பிராந்திய ஒத்துழைப்பு, அபிவிருத்தி மற்றும் பகிரப்பட்ட செழுமையை மேம்படுத்துவதற்கான தங்களது அயராத முயற்சிகளுக்காகவும் கொழும்புத் திட்டச் செயலகத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என விஜித ஹேரத் த
இந்நாள், நாம் கடந்து வந்துள்ள கால வரையறைக்கு மட்டும் உட்பட்டதொன்றல்லாமல், வலுப்பெற்றதொரு எண்ணமே கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், அளவு அல்லது வளங்களின் அடிப்படையில் வேறுபட்ட வெவ்வேறு நாடுகள் பொதுவானதொரு நோக்கத்திற்காக ஒன்றிணைதலின் சக்திவாய்ந்த கருப்பொருளையே நாம் இன்று கொண்டாடுகிறோம். ஒருவரையொருவர் ஆதரித்தல், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளல் மற்றும் ஒன்றாக வளர்ச்சியடைதல் என்ற இதன் நோக்கமானது, கொழும்புத் திட்டம் நிறுவப்பட்டதிலிருந்து மையபொருளாக இருந்து வந்துள்ளது.
1951 ஆம் ஆண்டு கொழும்பில் நிறுவப்பட்ட கொழும்புத் திட்டமானது, பிரம்மாண்டமானதொரு மாற்றத்தின் போது உருவானது. ஆசியாவின் பெரும்பகுதி காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு, நம்பிக்கைகள், சவால்கள் மற்றும் புதிய பாதைக்கான தேவை ஆகியவற்றால் நிறைந்திருந்தது. அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், திறனை வளர்க்கவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் ஒத்துழைக்கவும் அரசாங்கங்களை ஒன்றிணைக்குமொரு பிராந்திய ரீதியிலான பிரதிபலிப்பாக கொழும்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
கொழும்புத் திட்டச் செயலகத்தின் ஸ்தாபன உறுப்பினராகவும், ஏற்பாட்டு நாடாகவும், இக்குறிப்பிடத்தக்க அமைப்பின் பயணத்தில் ஆற்றியுள்ள பங்கைப் பற்றி இலங்கை பெருமிதம் கொள்கிறது. ஏழு பொதுநலவாய நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு, இன்று பன்முகத்தன்மை கொண்டதும், துடிப்பானதுமான ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 28 உறுப்பு நாடுகளைக் கொண்டதொரு துடிப்பான அமைப்போன்றாக வளர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக, கொழும்புத் திட்டம் அதன் முதன்மைத் திட்டங்கள் மூலம் நீடித்ததொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது:
• ஆயிரக்கணக்கான நிபுணர்களுக்கு பயிற்சி அளித்து தேசிய போதைப்பொருள் உபாயத்திட்டங்களை ஆதரித்த போதைப்பொருள் ஆலோசனைத் திட்டம்.
• திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம், குறிப்பாக சிறிய மற்றும் வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளில் பொது நிறுவனங்களை வலுப்படுத்தியுள்ளது.
• இலங்கை உட்பட பல நாடுகள் சுற்றுச்சூழல் அபாயங்களுக்குத் தயாராகவும், அவற்றைத் தகவமைத்துக் கொள்ளவும் உதவிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திட்டம்.
• பெண்களுக்கு வலுவூட்டல், சகல அம்சங்களையும் உள்ளடக்கியதொரு அபிவிருத்தியை ஊக்குவித்து, சமத்துவமின்மையை நிவர்த்தி செய்த பாலின விவகாரத் திட்டம்.
மேலும், மணிலாவைத் தளமாகக் கொண்ட கொழும்புத் திட்ட பயிற்சிக் கல்லூரி, பிராந்தியம் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை முன்னேற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இவை நிறுவன சாதனைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல், வாழ்க்கைத்தர மேம்பாடு, சமூகங்களை வலுப்பெறச்செய்தல் மற்றும் எதிர்காலத்திற்கான சிறப்பானதொரு மாற்றத்தையும் குறித்து நிற்கின்றன.
பெண்களே! அடவர்களே!
இன்றைய உலகில், பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பானது, பயன்மிக்கது மட்டுமின்றி, அது நாட்டிற்கு அவசியமானதுமாகும். நாம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தினாலான சவால்கள், இலத்திரனியல் பிளவுகள், சுகாதார நெருக்கடிகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட சிக்கலான சவால்களாகும். எந்தவொரு நாடும் இத்தகைய சவால்களை தனியாக எதிர்கொள்ள முடியாது. ஒரு நாடு முன்னேறும்போது, அதன் பிராந்தியத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை கொழும்புத் திட்டம் எமக்கு நினைவூட்டுகிறது. நாம் அறிவைப் பகிர்ந்துகொண்டு ஒருங்கிணைந்து கடமையாற்றும்போது, நாம் வலுவானதும், மீள்தன்மை கொண்டதுமானதொரு எதிர்காலத்தை உருவாக்குகிறோம்.
எமது பகிரப்பட்ட சாதனைகளைக் கொண்டாடும் அதே வேளையில், நாம் முன்னோக்கியும் பார்க்க வேண்டும். 1951 முதல் உலகம் வியத்தகு முறையில் மாறியுள்ளது. கொழும்புத் திட்டத்தின் அடுத்த கட்டமாக பின்வருவனவற்றைக் கவனத்திற்கொள்ள வேண்டும்:
• ஒவ்வொரு சமூகமும், எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் திறன்களை அணுகுவதை இலத்திரனியல் உள்ளடக்கத்தின் மூலம் உறுதி செய்தல்.
• குறிப்பாக கல்வி, புத்தாக்கம் மற்றும் முயற்சியாண்மை ஆகியவற்றினூடாக, இளைஞர்கள் மற்றும் பெண்களை வலுவூட்டல்.
• தொற்றுநோய்களினால் ஏற்படும் சமூக-பொருளாதார ரீதியிலான தாக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளிட்ட உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து நிலைபேறான மீட்சி.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் சவால்களில், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டியதொன்றாகும். பல உறுப்பு நாடுகளைப் போலவே, இலங்கையில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பது வெறும் சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்லாமல், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையைப் பாதிக்குமொரு சமூக நெருக்கடியுமாகும். போதைப் பழக்கத்தால் இழக்கப்படும் ஒவ்வொரு வாழ்க்கையும் கனவொன்றின் நிறைவேறாத எதிர்காலமாகும்.
இலங்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது வெறும் சட்ட அமுலாக்கப் பிரச்சினை மட்டுமல்லாமல், தேசியளவிலான அவசரநிலைத் தேவைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். காவற்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு சேவைகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல், போதைப்பொருள் கும்பல்களை சீர்குலைக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் சிறைச்சாலை அமைப்பிற்குள் ஊழலை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்தல் போன்ற பரந்த அளவிலான நிறுவனமட்டத்திலான சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல், குறிப்பாக நமது இளைஞர்களைக் குறிவைத்து, ஆரம்பமட்ட தலையீடு, விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான மறுவாழ்வு ஆகியவற்றில் முதலீடு செய்கிறோம்.
முக்கியமாக, இக்கூட்டு முயற்சியில் கோயில்கள், பள்ளிகள் மற்றும் சிவில் சமூகத்தை ஈடுபடுத்தும் வகையில் சமூக மட்டத்தில் தார்மீகத் தலைமைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுகாதார சீர்குலைவுகள் முதல் குடும்ப முறிவு, குற்றவியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி வரை போதைப்பொருள் பயன்பாட்டின் அடுக்கு ரீதியான தாக்கங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளாலும் உணரப்படுவதால் இந்த முழுமையான அணுகுமுறை அவசியமாகிறது.
இது, எந்தவொரு நாடும் தனியாகச் சமாளிக்கக்கூடிய சவாலல்ல. விழிப்புணர்வுக்கல்வி, ஆலோசனை மற்றும் புனர்வாழ்வில் முதலீடு செய்தல் மற்றும் மூலோபாயத்துடனும், ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் போதைப்பொருள் தடுப்பை வலுப்படுத்த வேண்டும். ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலமும், பிராந்தியம் முழுவதும் வலுவான சுகாதார மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகளின் வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலமும் கொழும்புத் திட்டமானது இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
கொழும்புத் திட்ட போதைப்பொருள் ஆலோசனைத் திட்டம் ஏற்கனவே 7,000 க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கேள்விக் குறைப்பிற்கான நிபுணர்களுக்கு பயிற்சி அளித்தல், கலாச்சார ரீதியாக பொருத்தமான சிகிச்சை முறைகளை உருவாக்குதல் மற்றும் பல உறுப்பு நாடுகளில் தேசிய மருந்து உத்திகளை உருவாக்குவதை ஆதரித்தல் போன்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. இச்சாதனைகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு மிகவும் விரிவானதும், ஒன்றுபட்டதுமான பிராந்தியத்தின் துலங்கலை உருவாக்கக்கூடிய வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.
மேதகு தலைவர்களே! பெண்களே! ஆடவர்களே!
பல ஆண்டுகளாக பிராந்தியம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த அமைப்பின் பணிகளைச் செயற்படுத்துவதில் தாராளமான பங்களிப்புகளை வழங்கியுள்ள கொழும்புத் திட்டத்தின் அனைத்து நிதிசார்ந்த பங்காளிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; எதிர்காலத்தை நாம் உற்று நோக்கும்போது, இம்முயற்சிகளைத் தக்கவைத்து விரிவுபடுத்துவதற்கு எமது நீண்டகால கூட்டாளர்களிடமிருந்து தொடர்ச்சியானதும், புதுப்பிக்கப்பட்டதுமான ஆதரவு அவசியமாகும். இந்த பகிரப்பட்ட பணிக்கான தங்கள் உறுதிப்பாட்டை அனைத்து உறுப்பு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளும் என்றும், கொழும்புத் திட்டம் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான வலுவான தளமாகத் தொடர்ந்து செயற்படுவதை உறுதி செய்யும் என நாம் நம்புகிறோம்.
நான், செயலாளர் நாயகம், செயலகம், எமது உறுப்பு நாடுகள், கூட்டாளர்கள் மற்றும் இப்பயணத்தில் பங்களித்த ஒவ்வொரு தனிநபருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்புத் திட்டத்தின் அபிலாஷைகளுக்கான எமது அர்ப்பணிப்பும், அவற்றை அடைவதற்கு கூட்டாகப் பணியாற்றுவதற்கான எமது உறுதிப்பாடும், எதிர்வரும் பல ஆண்டுகளில் மேலும் வலுவடையும் என நம்புகிறோம். இக்குறிக்கோளை நோக்கி உங்களுடன் இணைந்து பணியாற்ற இலங்கை ஆவலுடன் காத்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM