லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Digital Desk 2

18 Jul, 2025 | 05:43 PM
image

டிஜிற்றல் திரையுலகின் முன்னணி நட்சத்திர முகங்களான பாரத் , நிரஞ்சன் இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் பாரத்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர்கள் பாரத் - நிரஞ்சன் கதையின் நாயகர்களாக நடித்து இயக்கி வரும்' மிஸ்டர் பாரத் படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் ,தி ஸ்குவாட் ,தி ரூட் ,ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிச்சாமி ,ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஒரே கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனோவிஷன் நிறுவனத் தயாரிப்பிலான 'வித் லவ்'...

2026-07-21 19:04:07
news-image

ராக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்சிக்'...

2026-07-21 17:15:28
news-image

'பட்ஜட்டை விட நான்கு மடங்கு கூடுதலாக...

2026-07-21 17:06:58
news-image

ஓக்டோபரில் வெளியாகும் நயன்தாராவின் 'ஹாய்'

2026-07-21 17:18:12
news-image

புதுமுக நடிகர் டி ஐ கபில்...

2026-07-21 16:56:30
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'தகப்பன்' படத்தின்...

2026-07-21 16:54:45
news-image

நடிகர் சூரி நடிக்கும் 'ஏழு கடல்...

2026-07-21 17:05:06
news-image

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து...

2026-07-20 15:16:17
news-image

நமீத் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் உருவான 'ராமாயணம்...

2026-07-20 15:14:32
news-image

தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் நடிகை சாக்ஷி...

2026-07-20 15:12:10
news-image

மூன்று இந்திய தேசிய விருதுகளை வென்ற...

2026-07-20 14:23:11
news-image

இணைய தொடர்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதை...

2026-07-20 14:21:06