டிஜிற்றல் தளம் : Z 5
வெளியீடு : 18-7-25
தயாரிப்பு : 18 கிரியேட்டர்ஸ்
நடிகர்கள் : 'பருத்தி வீரன்' சரவணன், நம்ரிதா, அருள் டி சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய ஸ்ரீ, இனியா ராம் மற்றும் பலர்.
இயக்கம் : பாலாஜி செல்வராஜ்
கதாசிரியர் : சூர்யபிரதாப்.எஸ்
மதிப்பீடு : 2.5/5
பட மாளிகையில் வெளியாகும் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் எண்ணிக்கைக்கு சமமாக தற்போது முன்னணி டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் அசல் இணைய தொடர்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ஜீ 5( Z 5) டிஜிட்டல் தளத்தில் ஜூலை 18-ஆம் திகதி முதல் வெளியாகும் இணைய தொடர் 'சட்டமும் நீதியும்'. நீதிமன்ற வளாகத்தில் சக சட்டத்தரணிகளின் புறக்கணிப்பிற்கு ஆளான வழக்கு கிடைக்காத சட்டத்தரணி சுந்தரமூர்த்தி என்பவரின் தொழில் சார்ந்த வாழ்க்கையை உணர்வு பூர்வமாக விவரிக்கும் ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்த இணைய தொடர் டிஜிட்டல் தள பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ளதான படைப்பை வழங்கியதா? இல்லையா? என்பதை காண்போம்.
நீதிமன்ற வளாகத்தில் பிரச்சனைகளுடன் வருகை தரும் மக்களுக்கு அவர்களுடைய குறைகளை புகார்களாக மாற்றி தரும் பணியை சட்டத்தரணி சுந்தரமூர்த்தி ( 'பருத்தி வீரன்' சரவணன்) என்பவர் செய்து வருகிறார்.
இவர் தன்னுடைய வாழ்வில் ஒரு முறை கூட நீதியரசர்களுக்கு முன்பாக எந்த பிரிவைச் சேர்ந்த வழக்குகளுக்காகவும் வாதாடியதில்லை.
இதை கவனமாக தவிர்த்து விட்டு நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணியாக தனது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் சுந்தரமூர்த்தியிடம் இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் உதவியாளராக சேர விரும்புகிறார். அவரை தன்னுடைய உதவியாளராக ஏற்றுக்கொள்ள சுந்தரமூர்த்தி மறுப்பு தெரிவிக்கிறார்.
இந்த தருணத்தில் மத்திம வயதை சார்ந்த ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் தனக்கு நீதி வேண்டும் என்று தீக்குளித்து உயிரிழக்கிறார். சுந்தரமூர்த்தியின் கண் முன்னால் இந்த துயரச் சம்பவம் நடைபெறுவதால் அவருக்கு நீதியை பெற்று தர வேண்டும் என விரும்புகிறார்.
இதற்காக அவரை பற்றி விசாரிக்க தொடங்குகிறார். அந்தப் பெரியவரின் மகள் கடத்தப்பட்டிருப்பதும் இது தொடர்பான புகாரை தொடர்புடைய காவல் நிலையத்தில் ஏற்க மறுத்த தகவலையும் தெரிந்து கொள்கிறார்.
இதனை வழக்காக பதிவு செய்து பொதுநலன் வழக்கு ஒன்றை தொடுக்கிறார் சுந்தரமூர்த்தி. வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கு பொதுநலன் வழக்கு என்ற நிலையில் இருந்து ஆட்கொணர்வு வழக்காக பதிவு செய்யப்படுகிறது. அத்துடன் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடத்தப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிடுகிறது.
காவல்துறை இது தொடர்பான விசாரணையை தொடங்கும் போது கடத்தப்பட்ட பெண் இருபது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் - காவல்துறை - கதாபாத்திரம்- பார்வையாளர்கள்- என பல கோணங்களில் இருந்து எழுப்பப்படும் பல வினாக்களுக்கு விடை அளிக்கிறது இந்த இணைய தொடர்.
இறுதியில் சட்டத்தரணி சுந்தரமூர்த்தி வெற்றி பெற்றாரா? இல்லையா ?கடத்தப்பட்ட பெண்ணின் தற்போதைய நிலை என்ன? என்பதை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் விவரிப்பது தான் இந்த இணைய தொடர்.
சட்டத்தரணி சுந்தரமூர்த்திக்கு உரிய அங்கீகாரத்தை இந்த சமூகமும், அவரது குடும்பமும் வழங்க மறுக்கிறது. இந்த தருணத்தில் ஒரு துயர சம்பவத்தை நேரில் கண்ட பிறகு திறமையை இந்த உலகிற்கு பறைசாற்ற வேண்டும் என அந்த கதாபாத்திரம் எண்ணுவது சுவாராசியமாக இருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கான பயிற்சி இல்லாததை இந்த கதாபாத்திரம் அதனை நேர்த்தியாக வெளிப்படுத்துவதையும் ரசிக்க முடிகிறது. போதிய பயிற்சி இல்லாத காரணத்தினால்.. வழக்கின் போக்கு திசை திரும்புவதாலும் அவர் தடுமாறுவது இயல்பாக இருக்கிறது.
இவை அனைத்தையும் சட்டத்தரணி சுந்தரமூர்த்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரவணன் இயல்பாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
அவரிடம் இளம் சட்டத்தரணியாக பயிற்சி எடுக்கும் இளம்பெண் நம்ரிதாவின் சுறுசுறுப்பு ரசிகர்களை கவர்கிறது. அரசாங்க சட்டத்தரணியாக நடித்திருக்கும் நடிகர் அருள் டி சங்கரின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.
நீதிமன்ற வளாகம்- நீதிமன்றம்- ஒரு வழக்கு- இதனை சுற்றியே கதையும் திரைக்கதையும் பின்னப்பட்டிருந்தாலும் இந்திய நீதிமன்ற நடைமுறைகளில் கடைப்பிடிக்கப்படும் பல விடயங்கள் இடம் பெறாதது குறைதான்.
பல காட்சிகள் ஏற்கனவே வெளியான நீதிமன்றம் தொடர்பான படைப்புகளை நினைவூட்டினாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் நீளமும் இருபது நிமிடங்களுக்குள் இருப்பதும் அதனை பரபரப்பாக தொகுத்திருப்பதும் ரசிகர்களை உற்சாகமாகவே பயணிக்க வைக்கிறது.
கடத்தப்பட்ட பெண் குறித்த சுவராசியமான திருப்பம் ..இயக்குநரின் முத்திரையை தனித்துவமாக பதிக்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை பார்வையாளர்களை தொடர்ந்து அனைத்து அத்தியாயங்களையும் காண்பதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.
சட்டமும் நீதியும் - மறு சீராய்வுக்குரிய தீர்ப்பு
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM