இன்றைய திகதியில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதுகு தண்டுவட பகுதியில் நரம்பு அழுத்த பாதிப்பு ஏற்பட்டு, அதனால் தாங்க முடியாத வலி உண்டாகும். இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் அவர்களுடைய நடையில் மாற்றம் ஏற்படும். அத்துடன் அவர்கள் வலியுடன் ஆயுளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எழுபது வயதை கடந்த ஆண் - பெண் என இருவருக்கும் முதுகுத்தண்டு பகுதியில் வளைவு பாதிப்பு, முதுகு தண்டுவடத்தில் உள்ள எலும்பில் அடர்த்தியின்மை காரணமாக ஏற்படும் வலி மற்றும் இதனால் ஏற்படும் நரம்பு அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக விவரிக்க இயலாத துன்பங்களை சந்திக்க நேரிடும்.
முதுமையின் காரணமாக தண்டுவட பகுதியில் பாதிப்பு ஏற்படும். இதனை மருத்துவ மொழியில் ஓஸ்டியோபோரோடிக் எலும்பு முறிவு , நரம்பு அழுத்தம் , கீழ்ப் பக்க முதுகுத்தண்டு வளைவு என மூன்று வகையாக பிரித்து குறிப்பிடுவார்கள். இந்த பாதிப்புகள் அனைத்தையும் தொடக்க நிலையில் கண்டறிந்தால் அதனை சத்திர சிகிச்சை இன்றி Kyphoplasty & Vertebroplasty எனும் நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.
இதில் கீழ்ப் பக்க முதுகு பகுதியில் ஏற்படும் நரம்பு அழுத்த பாதிப்புகளை தொடக்க நிலையில் கண்டறிந்தால்.. ஊசி மருந்தியல் சிகிச்சை மூலமாக இதற்கு நிவாரணத்தை வழங்க இயலும். சிலருக்கு இத்தகைய தருணத்தில் பிரத்யேக இயன்முறை சிகிச்சை மூலமாகவும் நிவாரணத்தை அளிக்க இயலும்.
இத்தகைய பாதிப்புகளை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் முதுகுத்தண்டு பகுதியில் வளைவு ஏற்பட்டு, ஆயுள் முழுவதும் வலியை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். சிலருக்கு அவர்களது தோற்றத்தில் மாறுபாடும், அவர்களுடைய நடையில் வேறுபாடும் உண்டாகும். மேலும் இவர்களால் சிறிது தொலைவு தூரம் வரை கூட நடக்க இயலாத நிலை ஏற்படும். அதையும் கடந்து சிறிது தூரம் நடந்தால் கால்கள் மரத்துப் போக கூடும். அத்தகைய தருணங்களில் சிகிச்சையை மேற்கொள்ளும் போது சத்திர சிகிச்சை மூலமாகத்தான் இதற்கான நிவாரணத்தை பெற இயலும்.
வைத்தியர் விஜயராகவன்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM