தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், வன மகன் என படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தற்போது விண்வெளி வீரராக நடித்திருக்கும் படம் டிக் டிக் டிக்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டவுடன் அவரது ரசிகர்கள் இதனை பெரிய அளவில் வரவேற்றதுடன் இணையத்தில் வைரலாக்கி டிரெண்டிங்கிலும் வைத்திருக்கின்றனர்.

இதனை நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படத்தினை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியிருக்கிறார். இவருடன் நிவேதா பெத்துராஜ், ஆரோன் அஜிஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் விண்வெளியைச் சார்ந்த திரைக்கதையில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமையும் இப்படம் பெற்றிருக்கிறது. டிக் டிக் டிக் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.