உலகில் தின­சரி சுமார் 7,200 குழந்­தைகள் இறந்து பிறப்­ப­தாக செவ்­வாய்க்­கி­ழமை லான்செட் ஆய்­வேட்டில் வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய 5 ஆய்­வுகள் தெரிவிக்­கின்­றன.

இந்த ஆய்­வு­களின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு 2.6 மில்­லியன் குழந்­தைகள் இறந்து பிறக்­கின்­றன. அவற்றில் அரைப் பங்கு மர­ணங்கள் பிர­ச­வத்தின் போது இடம்­பெ­று­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.இவ்­வாறு பிர­ச­வத்தின் போது 1.3 மில்­லியன் குழந்­தைகள் மர­ண­ம­டை­வ­தாக இந்த ஆய்­வுகள் கூறு­கின்­றன.

எனினும் இது 2000 ஆம் ஆண்­டிலி­ருந்து கடந்த ஆண்டு வரை ஆண்டு தோறும் இடம்­பெற்ற மரண வீதங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 1000 பிறப்­பு­க­ளுக்கு 24.7 இ­லி­ருந்து 18.4 ஆக வீழ்ச்சி கண்­டுள்­ளது.

இறந்து பிறக்கும் குழந்­தை­களில் 6.7 சத­வீ­த­மா­னவை 35 வய­துக்கு மேற் ­பட்ட வய­து­டைய தாய்­மா­ருக்கு பிறந்­துள்­ளன. அதே­ச­மயம் ஏழ்­மையும் இந்த குழந்­தைகள் இறந்து பிறப்­பதில் முக்­கிய பங்கை வகிப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வறிய ஆபி­ரிக்க சஹாரா பிராந்தியத்தில் வேறு எந்தவொரு பிராந் தியத்தை விடவும் அதிகளவில் குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன.