இலங்கையில் சிறுமிகள் அதிகம் கர்ப்பம் தரிக்கும் மாவட்டம் எது தெரியுமா ? ; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

18 Jul, 2017 | 02:49 PM
image

நாட்டில் மிகச் சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் அதிகமுள்ளதாக பகுதியாக மாத்தளை மாவட்டத்தில் லக்கல, வில்கமுவ, நாவுல, அம்பங்கஸ்க ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

மாத்தளை செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.சிறு வயதில் கர்ப்பம் தரிக்கும் சிறுமிகள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுகாதார அமைச்சு முன்னெடுத்திருந்த ஆய்வின் போதே இந்த அதிர்ச்சித் தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.குடும்பச் சூழல், கல்வி அறிவின்மை என்பவையே இதற்கு காரணம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவினருக்கு அறிவித்து அவர்கள் மூலம் குறிப்பிட்ட பிரதேசங்களில் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதென மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11