மன்னார் குழப்பம் ; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Priyatharshan

18 Jul, 2017 | 02:00 PM
image

மன்னார் கரிசல் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினையடுத்து மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டார்.

மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கரிசல் புனித கப்பலேந்தி மாதா ஆலயக் காணி  எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் கருசல் புனித கப்பலேந்தி மாதா ஆலய காணிக்கு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் நீதிமன்ற பதிவாளர் குறித்த இடத்தில் இருந்து சென்ற சில நேரத்தில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக இடையூறுகளை மேற்கொண்டு வந்ததோடு, அமைக்கப்பட்ட சுற்று வேலிக்கான தூண்களை கடமையில் இருந்த பொலிஸார் முன்னிலையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் குறித்த காணிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திரண்டு வந்து குறித்த காணிக்கு போடப்பட்டிருந்த ஏனைய வேலித்தூண்களை உடைத்ததோடு, அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக கருசல் கிராம மக்கள் தெரிவித்தனர்.

எனினும் சுற்று வேலிக்கான தூண்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸார் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் கருசல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குச் சென்ற குறித்த நபர்கள் விட்டின் பின் புறம் சென்று வீட்டு அறை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த வீட்டின் அறை ஒன்றினுள் காணப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எறிந்து நாசமாகியுள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக கருசல் கிராமத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும், பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த முஸ்ஸிம்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட பெரிய கருசல் கிராமத்தைச சேர்ந்த சிலரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில் கடந்த   ஞாயிற்றுக்கிழமை காலை கருசல் கப்பலேந்தி மாதா ஆலயத்தில் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

எனினும் திருப்பலி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது ஆலயத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் கற்களினால் எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். இதனால் திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கோப நிலை ஏற்பட்டது. -இதனால் அங்கு மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது. உடனடியாக கருசல் கப்பலேந்தி மாதா ஆலய பகுதிக்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பெரிய கருசல் கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் மூன்று பேர் கடந்த 10 ஆம்திகதி  திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது மூன்று பிரிவுகளில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் குறித்த மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

மேலும் ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்து மன்றில் ஆஜர் படுத்துமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த நபர்களையும்  திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

குறித்த 5 சந்தேக நபர்களும் மீண்டும் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதன் போது பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த மேலும் 3 சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர் படுத்தினர். விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் குறித்த 8 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11