கவனம் ஈர்க்கும் நடிகர் பரத்தின் 'காளிதாஸ் 2' பட கிளர்வோட்டம்

Published By: Digital Desk 2

17 Jul, 2025 | 05:26 PM
image

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன்  மற்றும் ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளிதாஸ் 2' திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், 'பூவே உனக்காக' சங்கீதா  உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இப்படத்தின் கிளர்வோட்டம் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், வசீகரிக்கும் பின்னணி இசையும், ஆர்வத்தை தூண்டும் வசனங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் ஏற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்றி தெரிவித்த சூர்யா!

2026-08-16 11:12:29
news-image

மகுடம் - திரைப்பட விமர்சனம்

2026-08-15 16:27:02
news-image

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் 'பீப் '...

2026-08-15 16:29:50
news-image

துஷ்யந்த் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' படத்தின்...

2026-08-15 19:13:44
news-image

அசோக் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-08-15 15:43:22
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பாரீஸ் கஃபே'...

2026-08-15 15:45:02
news-image

விஸ்வநாத் & சன்ஸ் - திரைப்பட...

2026-08-14 20:02:53
news-image

'மொத ராத்திரி'க்காக ஆறு ஆண்டுகள் கஷ்டப்பட்ட...

2026-08-14 14:43:12
news-image

 வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின்...

2026-08-14 14:29:59
news-image

அக்சய் குமார் நடிக்கும் 'ஹைவான்' படத்தின்...

2026-08-14 14:29:28
news-image

கைத்தொலைபேசியால் நடிகை ஷகிலாவுக்கு வந்த வினை...

2026-08-14 09:18:00
news-image

நடிகர் ரிஷிகாந்த் நடிக்கும் 'மொத ராத்திரி'...

2026-08-13 17:44:56