'பாத்திய' என்றழைக்கப்படும் காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தது. அதன் தொடர்ச்சியாக, இரண்டு காட்டு யானைகள் உட்பட 13 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு திணைக்களம் புதன்கிழமை (16) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் தாரக பிரசாத்,
அநுராதபுரத்தில் 07 யானைகளும், பொலன்னறுவையில் 3 யானைகளும், வவுனியாவில் ஒரு யானையும், தெற்கில் 02 யானைகளும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன.
பாத்திய யானைக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் ஏற்பட்டதாக கடந்த மே மாதம் 18 ஆம் திகதி அன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது. 19 ஆம் திகதி கால்நடை மருத்துவர் ஒருவர் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்தார்.
யானையை பரிசோதனை செய்த போது குணமடைந்த நிலையில் சில துப்பாக்கி சூட்டு காயங்களும் முன்னங்காலில் ஒரு கட்டியும் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க,
கடந்த ஆறு மாதங்களில் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் 17 சதவீதமான யானைகள் உயிரிழந்துள்ளன.
அத்தோடு, இலங்கையில் 20 சதவீத யானை இறப்புகள் துப்பாக்கிச் சூட்டு காயங்களால் ஏற்படுவதாகவும், இதுபோன்ற இறப்புகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளால் ஏற்படுகிறது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
சட்டப்பூர்வ ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களை மதிப்பிட்டு அராசாங்கம் விசாரணைகளை எளிதாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM