கம்பளை கஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவி ஒரே நாளில் இருவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த மாணவி சம்பவ தினத்தன்று கம்பளை பொது பஸ் தரிப்பிடத்தில் பாடசாலை சீருடையை மாற்றி விட்டு தனது காதலனுடன் புஸ்ஸலாவை உணவு விடுதிக்கு சென்று அவர் அங்கு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்த மேலும் தெரியவருவதாவது,

குறித்த காதலனான இராணுவ வீரர் மாணவியை வீட்டுக்குச் செல்ல கூறி விட்டு அவர், பதுளை சென்றுள்ளார். 

துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட மாணவி வீடு செல்லாது மாவனெல்ல பகுதியிலிருந்து  தன் முன்னால் காதலுனுக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பை ஏற்படுத்தி அவருடன் விடுதியொன்றில் அன்றைய நாளை கழித்துள்ளார்.

சம்பவத்தோடு தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் வெவ்வேறு இடங்களில் நடந்துள்ளதால் பதுளை புஸ்ஸல்லாவ மற்றும் மாவனெல்ல பிரதேச பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.