செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை

Published By: Digital Desk 3

17 Jul, 2025 | 01:14 PM
image

பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய அரியவகை பாறை 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏல நிகழ்வு புதன்கிழமை (16) சோத்பியின் நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

NWA 16788 என அழைக்கப்படும் இந்த விண்கல் பாறை 24.5 கிலோ எடையும் சுமார்  38.1 சென்ரி மீற்றர் நீளமும் கொண்டது என சோத்பிஸ் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் பாறை 2023 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் நைஜரின் தொலைதூரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் செவ்வாய் கிரகத்தின் அடுத்த பெரிய பகுதியை விட 70% பெரியது என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்கற்கள் என்பது ஒரு சிறுகோள் அல்லது வால் நட்சத்திரம் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சென்ற பின்னர் எஞ்சியிருக்கும் பாறையின் எச்சங்கள் ஆகும்.

சிவப்பு நிற பழுப்பு நிற பாறையான இந்த விண்கல் அரியவகையானது. பூமியில் இதுவரை சுமார் 400 செவ்வாய் கிரக விண்கற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சோத்பியின் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இது பூமியில் செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பகுதி. இது அங்கிருந்து இங்கு வருவதற்கான வாய்ப்புகள் வானியல் ரீதியாக மிகக் குறைவு". "பூமியின் மேற்பரப்பு சுமார் 70 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இது கடலின் நடுவில் விழாமல் வரட்சியான தரைப் பகுதியில் விழுந்துள்ளமையினால் எம்மால் இதனை காணக்கிடைத்தது அதிஷ்டமே என சோத்பிஸின் அறிவியல் மற்றும் இயற்கை வரலாற்றுத் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹாட்டன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34
news-image

கருணைக் கொலை சட்டமூலத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்றம்...

2026-07-16 11:38:17
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார்...

2026-07-16 08:57:12
news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32
news-image

கியூபாவில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்...

2026-07-15 15:14:24
news-image

தாய்லாந்து விடுதியில் தீ விபத்து :...

2026-07-15 13:04:17
news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48