அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரி;ட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார்.
தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார்.

தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார்.
வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார்.
1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.

இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது.
டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM