வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பரந்தனிலிருந்து அனுராதபுரம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட ஒரு கிலோ 790 கிராம் கேரளா கஞ்சா பொதியுடன் கருணாகே ருவன் சாமர (வயது -22) என்பவரை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவேளை, வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒரு மாதத்தில் 7 ற்கும் மேற்பட்ட நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.