எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்; அரசாங்கம் முறையாக செயற்படுத்தாவிடின் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - ரணில்

Published By: Vishnu

17 Jul, 2025 | 02:48 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அத்திட்டத்தை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் படைக்கப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஐக்கிய தேசியக் கட்சி பற்றியே அதிகளவில் நூல்களை வெளியிட்டுள்ளார்.அதுவும் நன்மைக்கே ஏனெனில் 75 ஆண்டுகால அரசாங்கங்களை விமர்சிப்பவர்கள் இனியேனும் இவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் - அரிசி ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வெளிப்படுத்துகிறது. 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தொடந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சீனாவுடன் முதலாவதாக வர்த்தக ரீதியிலான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட நாடாக இலங்கை காணப்படுகிறது.இதனைத் தொடர்ந்தே இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பலமடைந்தது.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டிருந்தார். குறுகிய காலத்தில் பொருளாதார மீட்சிக்கான சிறந்த திட்டங்களை அமுல்படுத்தியுள்ளேன். இந்த திட்டங்களை சிறந்த முறையில் அரசாங்கம் செயற்படுத்தினால் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09