லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா: குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் போட்டி திட்டம்

Published By: Vishnu

16 Jul, 2025 | 06:53 PM
image

(நெவில் அன்தனி)

லொஸ் ஏஞ்சல்ஸ் (LA) 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் தொடக்க விழா நடைபெறுவதற்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கின்ற நிலையில் அவ் விழாவுக்கான போட்டி அட்டவணையை ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் இதுகாலம் வரை இல்லாத வகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் போட்டிக்கான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் முதல் தடவையாக இலட்சியம் மிக்கதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஒன்றாக லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா உருவாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் 1932 மற்றும் 1984 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களை நடத்திய லொஸ் ஏஞ்சல்ஸ், மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் விளையாட்டு விழாவை அரங்கேற்றும் நகரமாக பரிணமிக்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து கலிபோர்னியா மாநகரம் முதல் தடவையாக 2028 பராலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தவுள்ளது.

சுமார் மூன்று தசாப்தங்களுக்குப்  பின்னர் முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படவுள்ளது.

நுழைவுச் சீட்டுகளுடன் நடத்தப்படும் 844 போட்டி நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் சர்வதேச இரசிகர்களைக் கவரும் வகையில் நடத்த ஏற்பாட்டாளர்கள் எண்ணியுள்ளனர்.

பல்வேறு மூலோபாய பங்காளர்களான ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவைகள், விளையாட்டு விழாவை முன்னின்று நடத்தும் தேசத்தின் ஒளிபரப்பாளர், ஒவ்வொரு விளையாட்டுக்குமான சர்வதேச சங்கங்கள்/சம்மேளனங்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி இந்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் உத்தியோகபூர்வ மற்றும் உலகளாவிய தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் திட்டத்திற்கு குழுவின் நிறைவேற்றுச் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அட்டவணையில் முக்கிய அம்சங்கள்

ஆரம்ப விழா மற்றும் முடிவு விழா: ஆரம்ப விழா வைபவம் லொஸ் ஏஞ்சல்ஸ் ஞாபகார்த்த விளையாட்டரங்கிலும் இங்ல்வூட் விளையாட்டரங்கிலும் இணைந்து 2028 ஜூலை 14ஆம் திகதி நடத்தப்படும். முடிவு   விழா   லொஸ் ஏஞ்சல்ஸ் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் 2028 ஜூலை 30ஆம் திகதி நடைபெறும்.

மெய்வல்லுநர் மற்றும் நீச்சல் அட்டவணையில் வரலாற்று மாற்றம்: இந்த இரண்டு போட்டி நிகழ்ச்சிகளின் வரிசையில் ஏற்பட்ட வரலாற்று மாற்றத்தால் லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு விழா குறிப்பிடத்தக்க உற்சாகத்துடன் தொடங்கவுள்ளது. வழமையாக ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் கடைசியாக நடத்தப்படும் மெய்வல்லுநர் போட்டிகள், லொஸ் ஏஞ்சல்ஸில் முதல் வாரத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நீச்சல் போட்டிகள் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும்.

LA ஞாபகார்த்த விளையாட்டரங்கில் மெய்வல்லுநர் (தட, கள) போட்டிகள்: உலகின் மிகச் சிறந்த வீர, வீராங்கனைகளின் சாதனைகளை வெளிக்கொண்டுவரும் மெய்வல்லுநர் போட்டிகள் லோஸ் ஏஞ்சல்ஸ் (LA) ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெறும். பாரம்பரியத்தைப் பேணும்வகையில் மரத்தன் ஓட்டப் போட்டிகள் வழமைபோல் கடைசி வாரத்தின் இறுதியில் நடைபெறும்.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் முதலாவது பதக்கம்: விழாவின் முதலாம் நாளன்று மூவம்ச (Triathlon) போட்டி நிகழ்ச்சி நடைபெறும் வெனிஸ் கடற்கரையில் முதலாவது தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் சூட்டப்படும்.

15ஆவது நாள், அதிகளவிலான பதக்கங்கள் சூட்டப்படும் நாள்: ஒலிம்பிக் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத அதிகளவிலான பதக்கங்கள் சூட்டப்படும் நாளாக  15ஆவது நாள்  பதிவாகும். அன்றைய தினம் மாத்திரம் மொத்தம் 35 பதக்கங்கள் சூட்டப்படும். இதில் 18 குழு நிலை போட்டிகளும் நீச்சல் உட்பட 19 தனிநபர் போட்டிகளும் அடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூன்று வருடங்களின்...

2026-08-12 15:17:44