செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும்.- மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள்.-மெலானி குணதிலக

Published By: Rajeeban

16 Jul, 2025 | 05:19 PM
image

செம்மணி தெற்கில் உள்ள எங்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றது. யுத்தத்தின்போது மக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டபோது எங்களில் பலர் எங்கள் மனதுகளில் துப்பாக்கி ரவைகளையும்  குண்டுவெடிப்புகளையும் உருவாக்கினோம்.நாங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றை.

ஆனால் யுத்தத்தின்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தின் பெயரால் பாலியல் வன்முறைசிறுவர் பாலியல் வன்முறை உட்பட பல விடயங்கள் இடம்பெற்றன.

இன்றும் செம்மணியிலிருந்து எலும்புகள் வெளியாகும் போது அப்போது அரந்தலாவை என்பதே எங்கள் குற்ற மனச்சாட்சியாக உள்ளது. 

இனவாத அரசியல்வாதிகளும் அரசியலுக்கான இனவெறியை பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகளும் ஊடகங்களும் பல வருடங்களாக  வெறுப்பினால் உரமிடப்பட்டிருந்த மனங்களின் மனச்சாட்சியை அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் காயங்களை குணப்படுத்துவதற்கு நாங்கள் ஆழமாக தோண்டி அந்த காயங்களை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பிரீத் கேட்க்கும் நாட்டில் பொதுமக்கள் சிறிய சிறுவர்களாக புதைக்கப்பட்டபோது எம்மி;டமிருந்து பறிபோன விழுமியங்கள் குறித்து நாங்கள் மீள ஆராயவேண்டும்.

வடக்குகிழக்கு மக்கள் தங்களிற்கு எதிரான அநீதிகள் குறித்து குரல் எழுப்பும் ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் மனச்சாட்சிகளை மறைத்துவைத்திருக்கின்றோம் என்பதை நாங்கள் உணரவேண்டும்.

வடக்கில் நடந்த குற்றங்களும் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களும் மெல்லிசைகளில்இ சொல்லப்பட்ட கதைகளில்இஎழுதப்பட்ட கவிதைகளில் இதொலைந்து போயின என்பதை தெற்கில் உள்ள நாம் உணரவேண்டும்.

நாங்கள் இறக்கவில்லை என்று சொன்னாலும் மரணத்தை நோக்கிப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. செம்மணிக்கு நீதி கேட்கும்போது சிறு குழந்தைகளின் எலும்புகள் வெளிப்படும்போது அது ஒரு இருண்ட உணர்வு. ஆனால் "அப்புறம் அரலகங்வில அறந்தலவா" என்று அலறும் இதயத்துடன் சிறிது நேரம் உட்காருங்கள். கோபத்தைத் தாண்டி குற்ற உணர்வை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சிரமத்தைத் தாங்கி அந்த உணர்வை அடையாளம் காணுங்கள். இனவெறி மதம் சார்ந்த பெயரடைகளை அகற்றி மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்கத் தொடங்க வேண்டிய இடம் அதுதான்.

செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும். மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right