பின்தங்கிய பிரதேச பாடசாலைகள் தெரிவுசெய்யப்படுவது, நட்பின் அடிப்படையிலன்றி, மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியுடன் அமைய வேண்டும் - பிரதமர் ஹரினி அமரசூரிய

16 Jul, 2025 | 02:50 PM
image

பின்தங்கிய பிரதேச பாடசாலைகள், அவற்றின் மேம்பாட்டுக்காக தெரிவுசெய்யப்படுவது, நட்பின் அடிப்படையில் அல்லாமல் மாவட்ட மேம்பாட்டுக் குழுவின் அனுமதியின் அடிப்படையில் தெரிவுகள் அமைய வேண்டும் என்றும், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் வேலையைப் பெறுவதற்கு அல்லது பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.  

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை (13) கிழக்கு மாகாண சபையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில்,

இது, நாம் அனைவருக்கும் கிடைக்கும் வரலாற்று வாய்ப்பு. கல்வி சீர்திருத்தத்தின் மூலம் உலகத்துக்கு ஏற்ற தரமான கல்வியை நம்மால் வழங்க முடியும். 

அனைத்து மாணவர்களும் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும்போது வேலையைப் பெறுவதற்கு தேவையான வகையில் NVQ சான்றிதழ் கிடைக்கும்.

நிலவும் கல்வி முறையில் மாணவர்கள் வேலைக்குச் செல்லும்போது திறமைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் பல்கலைக்கழகங்களுக்கு மென்மையான திறமைகளை மேம்படுத்த வேண்டியதாக உள்ளது. அது பாடசாலைகளில் செய்யப்பட வேண்டும்.

9ஆம் தரத்திலிருந்து, மாணவர்கள் தங்களது எதிர்காலத் தொழில் குறித்து முடிவு செய்வதற்கும் அதற்கான அனுபவத்தை அவர்கள் பெறுவதற்கும் புதிய சீர்திருத்தத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.

11 ஆண்டுகளாக அல்லது 13  ஆண்டுகளாகக்  கல்வி பெற்று பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு, தேவைப்பட்டால், வேலை செய்யவும் முடியும், தேவையானால் பட்டம் பெறவும் வாய்ப்பு உள்ளது. விரும்பினால் வேலை செய்யும்போதே பட்டம் பெறவும் வாய்ப்புள்ளது.

கல்வி சீர்திருத்தத்தினுள் பாடத்திட்டம் மட்டுமல்லாமல் பாடசாலை அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சீர்திருத்தம் பற்றி மக்களிடையே கருத்தாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட பணத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள். அதுபோல் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் மேம்பாட்டிற்கான சில தெரிவுகளின்போது கிராமத்தவர் என்ற முறையில் அல்லது தனிப்பட்ட உறவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டாம். 

சரியான முறையைக் கடைபிடித்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் செய்யுங்கள். பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் மாணவர்களை பின்தங்கிய கிராமங்களில் சிறைப்படுத்தி தரமான கல்வியை வழங்க முடியாது.

கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகளில் கல்வி அமைச்சு, மாகாண சபை, மாகாண கல்வித் திணைக்களம் போன்று வலய அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஷான் அக்மீமன, எஸ். குகனாதன், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட  பிரமுகர்களும், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் என பெருமளவினர் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 17:14:26
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10