புதிய வரிச்சட்டமூலத்தினூடாக மதஸ்தலங்களுக்கு 14 சதவீத வரி

Published By: Robert

18 Jul, 2017 | 02:43 PM
image

புதிய வரு­மான வரிச் சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக  மதஸ்­த­லங்­க­ளுக்கு 14 சத­வீத வரி அறவி­டு­வ­தற்கு அர­சாங்கம் யோசனை முன்­வைத்­துள்­ள­தாக  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

புதிய வரு­மான வரிகள் சட்­ட­மூலம் தொடர்பில் அஸ்­கி­ரிய மாநாயக்க தேரர் வர­கா­கொட ஸ்ரீ ஞான­ர­த்ன தேரரை தெளி­வூட்டும் முக­மாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­த்தன மா­நா­யக்க தேரரை நேற்று கண்­டியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். அதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தேசிய வரு­மான வரிகள் சட்­ட­மூ­லத்தின் மூன்­றா­வது உறுப்­பு­ரைக்­க­மை­வாக மதஸ்­த­லங்கள், கலை­ஞர்கள், இலக்­கி­ய­வா­திகள், சிறு மற்றும் மத்­தி­ய­தர வர்த்­த­கர்­க­ளுக்­கான வரி விலக்­க­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் புதிய வரி திருத்­தச்­சட்­ட­மூ­லத்­தி­னூ­டாக அவ்­வ­ரி­வி­லக்கு நீக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே மதஸ்­த­லங்கள் மற்றும் சம­யஸ்­த­லங்கள் மீது அர­சாங்கம் வரி அற­விட முனை­வ­தை­யிட்டு மிகவும் கவ­லை­ய­டைய வேண்­டி­யுள்­ளது. இது சமயஸ்தலங்கள் மற்றும் கலாசார நிலையங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58