அம்பாறையில் போலி ஆவணங்கள், போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

16 Jul, 2025 | 10:52 AM
image

அம்பாறை - பக்கியெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் போலி ஆவணங்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக பக்கியெல்ல பொலிஸார் தெரிவித்தனர். 

பக்கியெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடம் இருந்து, 04 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 04 தேசிய அடையாள அட்டைகள், 02 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் , சாரதி அனுமதி பத்திரம், 02 பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஒரு கிராம சேவையாளர் சான்றிதழ் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஏதேனும் குற்றச் செயல்களுக்காக இந்த போலி ஆவணங்களை வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பக்கியெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

2026-02-13 08:42:59
news-image

விபத்தில் சிக்கி 17 வயது இளைஞன்...

2026-02-13 08:24:52
news-image

கிழக்கு, மத்திய, ஊவா உள்ளிட்ட பல...

2026-02-13 06:24:32
news-image

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு...

2026-02-12 16:29:36
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரச்சினைக்கு...

2026-02-12 20:25:41
news-image

கல்விச் சபையை நிறுவுவ நிபுணர் குழு...

2026-02-12 16:50:56
news-image

தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான கொடுப்பனவுகளுக்காக...

2026-02-12 16:31:16
news-image

இலங்கை கோரினால் ஆதரவு வழங்க தயார்...

2026-02-12 20:25:22
news-image

வாக்குறுதிகளை நிறைவேற்றியது அரசாங்கம் - கொழும்பு...

2026-02-12 20:24:48