பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை பிணையில் விடுதலை செய்யுமாறு தங்காலை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உப பொலிஸ் பரிசோதகரை 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாந்தோட்டை, தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் தங்காலை பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கடந்த 12 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் தங்காலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் நேற்றைய தினம் தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM