தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகரும், இசை கலைஞருமான டிஜே அருணாச்சலம். இவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' உசுரே ' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார் - பேரரசு - சுப்பிரமணிய சிவா- லோகேஷ் அஜில்ஸ் - வாலி மோகன் தாஸ் - இசையமைப்பாளர் சி. சத்யா- நடிகர் மிர்ச்சி சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' உசுரே' படத்தில் டீஜே அருணாசலம், ஜனனி, மந்த்ரா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மார்கி சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரண் ஜோஸ் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மௌலி எம் . ராதாகிருஷ்ணா தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் டிஜே அருணாச்சலம் பேசுகையில், '' எந்த திரைப்பட பின்னணியும் இல்லாத ஈழ தமிழ் குடும்பத்தில் இருந்து வருகை தந்துள்ளேன் இதற்கு வித்திட்ட எம்முடைய குரு வெற்றி மாறனுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற இடத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. நான் நடிகர் சிலம்பரசனின் ரசிகன். இப்படத்தில் நடிக்கும் போது அவருடைய நடிப்பில் வெளியான கோவில் எனும் திரைப்படத்தை மனதில் வைத்துக் கொண்டு நடித்தேன். இப்படம் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM