இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களது உணவு பழக்கத்தை மாற்றி அமைத்துக் கொண்டதால்.. உணவை நன்றாக பற்கள் மூலம் மென்று பசியாறுவது குறைந்து கொண்டே வருகிறது. அத்துடன் பற்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் குளிர்பானங்களை அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் பற்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது. இந்நிலையில் பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான நவீன தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பற்களை சுத்தப்படுத்திக் கொள்வதிலும் பற்கள் உள்ள வாய்ப் பகுதியை சுகாதாரமாக வைத்துக் கொள்வதிலும் அனைத்து வயதில் உள்ளவர்களும் அலட்சியம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக பற்களின் வேர்கள் பாதிக்கப்படுகிறது. பல் வலி ஏற்பட்ட பிறகு வைத்தியர்களை அணுகி வலிமை இழந்த பற்களுக்கு வேர் சிகிச்சை செய்து கொள்கிறார்கள். பொதுவாக பற்களுக்கு வேர் சிகிச்சை செய்து கொண்டால்.. அந்த பற்களை பாதுகாக்கவும் தற்போது CEREC எனும் நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகி இருக்கிறது.
இத்தகைய சிகிச்சையின் போது வைத்திய நிபுணர்கள் உங்களுடைய வாய்ப்பகுதியில் சிறிய அளவிலான கமெராவை பொருத்துகிறார். அந்த கமெரா பற்கள், ஈறுகள் ஆகியவற்றை படம் எடுத்து அதனை கணினியுடன் இணைத்து முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உரு மாற்றம் செய்கிறது. அதன் பிறகு பற்களை பாதுகாப்பதற்கான பிரத்யேக உறை உருவாக்கப்படுகிறது. இந்த உறையை பற்கள் மீது அணிவிக்கும் போது அந்த பற்கள் ஆரோக்கியம் பெறுவதுடன் தோற்ற பொலிவும் மேம்படுகிறது. இத்தகைய நவீன சிகிச்சை மூலம் பக்க விளைவுகள் மிக மிக குறைவு என்பதால் நோயாளிகளிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வைத்தியர் செந்தில்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM