எம்மில் பெரும்பான்மையானவர்கள் முருகப்பெருமானின் பக்தர்கள் தான். அதன் காரணமாகவே முருகனின் அம்சம் என போற்றப்படும் மயிலிறகை வீடுகளில் வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு பிரிவினரும், வீடுகளில் மயிலிறகை வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒரு பிரிவினரும் சொல்கிறார்கள். இதனால் மயிலிறகை பாவிப்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இது தொடர்பாக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில விளக்கத்தை தாமாக முன்வந்து வழங்குகிறார்கள்.
மயிலிறகு முருகனின் அம்சம் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மயிலிறகு இந்த பிரபஞ்ச ஆற்றலுடன் நேரடியாக தொடர்பு கொண்டவை. இதன் காரணமாக இதனை எம்முடைய வீடுகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றால் ..அதற்கு முறையான பராமரிப்பு அவசியம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
இதனைத் தொடர்ந்து எம்முடைய வீடுகளில் பதினொன்று என்ற எண்ணிக்கையிலான மயிலிறகை இடம்பெறச் செய்யலாம். இவை எம்முடைய வீடுகளில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர் நிலையான ஆற்றலை பரவச் செய்யும்.
மயிலிறகை நீங்கள் உங்களுடைய வீட்டில் பாவிக்க தொடங்கினால்.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் சொற்களைத் தான் பாவிக்க வேண்டும். இதனை மறந்து ஒரேயொரு முறை நீங்கள் எதிர்மறையான சொற்களை பயன்படுத்தினால்.. மயிலிறகின் சூட்சம ஆற்றல் குறைய தொடங்கும். அதனைத் தொடர்ந்து மயிலிறகில் அமையப்பெற்றுள்ள நேர்நிலை ஆற்றலின் வீரியமும் குறைய தொடங்கும்.
மயிலிறகை நீங்கள் உங்களுடைய வீட்டில் இடம்பெறச் செய்தாலும்... 90 நாட்களுக்கு ஒரு முறை அதனை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும். ஏனெனில் 90 நாட்களில் அவை பெற்றிருந்த சூட்சம ஆற்றலை இழக்க தொடங்கும். இதன் காரணமாக 90 நாட்களுக்குப் பிறகு நீங்கள் புதிதாக பதினொன்று என்ற எண்ணிக்கையிலான மயிலிறகை இடம்பெறச் செய்து அதனை முறையாக பராமரித்தால் உங்களது வீட்டில் செல்வம் பெருகுவதுடன் மகிழ்ச்சியும் மேலோங்கும். முருக பெருமானின் பரிபூரணமான அருளும் கிட்டும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM