ரி20  தொடரை வெல்வதற்கு இலங்கை அணியினர் மூன்று துறைகளிலும் முழுமையாக பிரகாசிக்க வேண்டும் - சனத் ஜயசூரிய

Published By: Vishnu

15 Jul, 2025 | 08:22 PM
image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிரான சர்வதேச  ரி20   கிரிக்கெட் தொடரை கைப்பற்றுவதற்கு இலங்கை அணியினர் மூன்று துறைகளிலும் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என ஊடகவியாலாளர்களிடம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் சமப்படத்தப்பட்டுள்ள நிலையில் தீர்மானம் மிக்க கடைசிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நாளை புதன்கிழமை (16) இரவு நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கு முன்னோடியாக ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே சனத் ஜயசூரிய இதனைத் தெரிவித்தார்.

'தம்புள்ளையில் நடைபெற்ற இரண்டாவது (சர்வதேச ரி20) போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கிரிக்கெட்டில் இவ்வாறு இடம்பெறுவது இயல்பு. அது விளையாட்டில் ஒரு பகுதியாகும். எனினும் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையை பேணுவது அவசியம். இரண்டாவது போட்டியில் நாங்கள் தவறுகளை இழைத்தோம். நாம் மீண்டு எழ வேண்டும். ஏனெனில் இது தீர்மானம் மிக்க போட்டி. இப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்படவேண்டும். எல்லா போட்டிகளிலும் அழுத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால், எமது வீரர்கள் அழுத்தத்தை சிறப்பாக கையாள்வர்' என சனத் ஜயசூரிய கூறினார்.

நான்காம் இலக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது குறித்து சுட்டிக்காட்டியபோது,

'பொதுவாக நாங்கள் போட்டிக்கு போட்டி, எதிரணியின் பலம், பலவீனத்தை ஆராய்ந்தே இறுதி அணியைத் தெரிவுசெய்வோம். அத்துடன் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவே பந்துவீச்சாளர்களை நாங்கள் தீர்மானிப்போம். எமது துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் முன்வரிசை வீரர்கள் நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெற வேண்டும். சரித் அசலன்க துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டார். ஒட்டு மொத்தத்தில் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமை வெளிப்படவேண்டும்.

'அவிஷ்க பேர்னாண்டோ பயிற்சிகளின்போது திறமையை வெளிப்படுத்தினால் போதாது. போட்டிகளின்போது ஆடுகளத்தில் அவர் திறமையை வெளிப்படுத்தவேண்டும். அவருக்கு பயிற்றுநர்கள், அணித் தலைவர் உட்பட நாங்களும் நம்பிக்கையை ஊட்டியுள்ளோம். இதேவேளை, துடுப்பாட்டத்தில் ஒன்று முதல் நான்காம் இலக்கம் வரை எந்த நிலையிலும் துடுப்பெடுத்தாட தயார் என தினேஷ் சந்திமால் கூறியுள்ளார். அவர் கடந்த 3 வருடங்களாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், உள்ளூர போட்டிகளில் அவர் திறமையாக விளையாடியுள்ளார். இதேவேளை, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே போன்றவர்களும் கவனத்தில் கொள்ளப்படுவார்கள். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் நாங்கள் சில சாத்தியக்கூறுகளை பரீட்சித்துவருகிறோம்.

'தீர்மானம் மிக்க நாளைய போட்டியில் நாங்கள் துடுப்பாட்டத்தை பலப்படுத்த எண்ணியுள்ளோம். கமிந்து மெண்டிஸை அணியில் இணைத்தால் அவரை பந்துவீச்சிலும் பயன்படுத்தலாம். சரித் அசலன்க முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீச்சில் ஈடுபடாத போதிலும் இந்தப் போட்டியில் பந்துவீசுவார். பந்துவீச்சில்தான் நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நாளைய போட்டிக்கான ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

சனத் ஜயசூரியவின் கூற்றுப் பிரகாரம் தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் இறுதி அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவிஷ்க பெர்னாண்டோவும் சாமிக்க கருணாரட்னவும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது இவ்வாறிருக்க, இந்தத் தொடரை கைப்பற்றும் குறிக்கோளுடன் இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் பங்களாதேஷ் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ அல்லது தினேஷ் சந்திமால், சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ் அல்லது துனித் வெல்லாலகே, தசன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார அல்லது மதீஷ பத்திரண.

பங்களாதேஷ்: பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ் (தலைவர்), தௌஹித் ஹிரிதோய், மெஹிதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசெய்ன், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசெய்ன்,  மொஹம்மத் சய்புதின், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19