வாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்  56 வயதுடைய கதிர்காமன் சின்னத்தம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விவசாயியின் சடலம் மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.