யாழ்.தீவ­கத்தில் தண்ணீர் இல்­லா­மையால் இடம்­பெ­யர்வு ஏற்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­துடன் குடி­நீரை வழங்­கு­வ­தற்­கான மூலத்தை கண்­டு­பி­டித்து தண்ணீர் வழங்க வேண்டும் என தெரி­விக்­கப்பட்­டது. 

கடல்­நீரை குடி தண்­ணீ­ராக்கும் திட்டம் குறித்த வேலைப்­பட்­டறை மற்றும் அனு­பவப் பகிர்வு மாவட்டச் செய­ல­கத்தில் நடை­பெற்­ற­போதே குறித்த விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

ஊர்­கா­வற்­றுறை பிர­தே­சத்தை பொறுத்த வரையில் இந்த மாத இறு­தியில் கிணற்றில் தண்ணீர் இருக்­க­மாட்­டாது. அப்­ப­குதி மக்கள் தண்­ணீ­ருக்கு கட­லுக்கு செல்ல வேண்டும் ஆகவே அம் மக்­க­ளுக்கு விரை­வாக குடி நீரை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

2019 ஆம் ஆண்­டி­லா­வது முழு­மை­யாக குடி­நீரை வழங்க வேண்டும். தற்­போது ஊர்­கா­வற்­று­றையில் தண்ணீர் குழாய்கள் பொருத்­தப்­பட்­டுள்­னது. ஆனால் தண்ணீர் வர­வில்லை. கிராம மட்­டங்­களில் மக்­களை சந்­திக்கும் போது  தண்ணீர் வருமா? வராதா? என கேட்­கி­றார்கள். 

யாழ்.மாவட்­டத்தில் தீவ­கத்தை தவிர்த்து ஏனைய இடங்­களை பொறுத்­த­வ­ரையில் தண்ணீர் குடிக்­க­லாமா? குடிக்க முடி­யாதா? என்ற பிரச்­சினை உள்­ளது. ஆனால் தீவ­கத்தில் கிணற்­றுக்குள் தண்­ணீரே இல்லை. இதற்கு முக்­கி­யத்­துவம் வழங்கி  நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லாது விடில் மக்கள் இடம்­பெ­யர்ந்து வேறு பகு­திக்கே செல்ல வேண்­டிய நிலை ஏற்­படும். 

இதே­வேளை தற்­போது குடி­நீரை பற்றி பேசி வரு­கின்ற போதும் தண்ணீரின் தேவையும் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கின்­றது. எனினும் தேவை­யான அளவு தண்ணீர் இல்­லா­மையால் யாழ்.மாவட்­டத்தில் தொழிற்­சா­லைகள் வரு­வ­தில்லை. தொழிற்­சா­லை­க­ளுக்­கு­ரிய ஆய்­வுகள் நடை­பெற்ற போதும் போதி­ய­ளவு தண்ணீர் இல்­லாத கார­ணத்தால் தொழிற்­சா­லைகள் இங்கு வரு­வதை விரும்­பு­வ­தில்லை. 

எனினும் வரு­கின்ற தொழிற்­சா­லைகள் வன்­னிப்­ப­கு­தியை நோக்கி நகர்ந்து செல்­வ­தா­கவும்  தெரி­விக்­கப்­பட்­டது. 

மேலும் தண்ணீர் என்­பது தேவை­யான ஒன்று அதனை துரி­த­மாக வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். நீண்ட கால திட்­டங்கள் பல இருக்­கின்­ற­போது துரி­த­மாக வழங்­கப்­ப­டு­கின்ற திட்­டங்­களை அடை­யாளம் கண்டு மக்­க­ளுக்கு தண்­ணீரை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். 

இக்­க­லந்­து­ரை­யா­டலில் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் நிபு­ணத்­துவ நிபுணர் எஸ்.எம்.எஸ். குரூஸ்  மற்றும் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி குடி­தண்ணீர் மற்றும் சுகா­தாரத் திட் டம் தொடர்­பான திட்­டப்­ ப­ணிப்­பாளர் எந் திரி பாரதிதாசன்  அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த மூத்த பொறியியலாளர் சி.ஜெயசீலன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.