பதவியில் நீடிப்பதற்காக காசா யுத்தத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நீடித்தார் ; யுத்த நிறுத்த திட்டங்களை நிராகரித்தார் - நியுயோர்க் டைம்ஸ்

Published By: Rajeeban

15 Jul, 2025 | 12:16 PM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது.

பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார் ,என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை  மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது.

காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது.

பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என  நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம்

நியுயோர்க் டைம்ஸ் செய்திகள்  இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி;...

2026-07-18 10:24:03
news-image

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்...

2026-07-18 09:26:16
news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31
news-image

ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 7...

2026-07-17 12:19:37
news-image

மாணவர்கள், ஊடகவியலாளர்களின் வீசா நடைமுறையில் மாற்றம்:...

2026-07-17 09:18:48
news-image

மியன்மாரில் இருந்து தப்பியோட முயன்ற 500-க்கும்...

2026-07-16 14:45:24
news-image

கொங்கோ காடுகளில் கண்டறியப்பட்டது புதிய குரங்கு...

2026-07-16 12:23:34