அமானா வங்கி நிர்வாக தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவு

Published By: Digital Desk 2

15 Jul, 2025 | 12:17 PM
image

அமானா வங்கி  நிர்வாக தலைமைத்துவ மேம்பாட்டுப் பயிற்சி திட்டம் (Executive Leadership Development Programme) எனும் உள்ளக 15 வார பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

நிறுவனத்தினுள் தூர நோக்குடைய தலைவர்களை இனங்கண்டு அவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.

கனிஷ்டநிலை நிறைவேற்று அதிகாரிகளுக்கு தமது தொழில் நிலையில் சிறப்பாக இயங்கவும், வங்கியினுள் நிறைவேற்று நிலைகளுக்கு உயர்வதற்கு அவசியமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்த 15 ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் BMICH இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் உட்பட முகாமைத்துவ குழுவின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

ELDP இல் தொழில்நிலை சுழற்சி ஒப்படைகள், தொழிற்பயிற்சி, விசேடத்துவ பயிற்சி, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த செயற்திட்ட அடிப்படையிலான பயிற்சிகள், மூலோபாய சிந்தனை மற்றும் தீர்மானமெடுக்கும் ஆற்றல்கள் போன்றன அடங்கியிருந்தன.

ஊடாடு (interactive) பயிலல், தக்க நேர கைகோர்ப்பு மற்றும் வலைப்பின்னல்கள் போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பல்வேறு பிரிவுகள் மற்றும் அலகுகளிடையிலான செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு பங்குபற்றுனர்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதன் போது, ஒவ்வொரு பங்குபற்றுனருக்கும் ஒரு ஆலோசனை வழங்குனர் ஒதுக்கப்பட்டு, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் முன்னேற்றமும் கண்காணிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right