இந்தியாவை 22 ஓட்டங்களால் வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 2 - 1 என இங்கிலாந்து முன்னிலை அடைந்தது

Published By: Vishnu

14 Jul, 2025 | 10:36 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் கடைசி நாளன்று மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய மூன்றாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 22 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்க இங்கிலாந்து 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்துள்ளது.

இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா போட்டியின் நான்காம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கடைசி நாளான இன்று தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இன்று காலை ரிஷாப் பான்ட் (1), நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் கே. எல். ராகுல் (39), வொஷிங்டன் சுந்தர் (0) ஆகிய மூவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

மொத்த எண்ணிக்கை 112 ஓட்டங்களாக இருந்தபோது நிட்டிஷ் குமார் ரெட்டி 13 ஓட்டங்களுடன் எட்டாவதாக ஆட்டம் இழந்தார்.

ஆனால், ரவிந்த்ர ஜடேஜா தனி ஒருவராகப் போராடி இந்தத் தொடரில் தனது நான்காவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

ஒன்பதாவத விக்கெட்டில் ஜஸ்ப்ரிட் பும்ராவுடன் 35 ஓட்டங்களையும் கடைசி விக்கெட்டில் மொஹம்மத் சிராஜுடன் 23 ஓட்டங்களையும் ரவிந்த்ர ஜடேஜா பகிர்ந்தார்.

வெற்றிக்கு மேலும் 23 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது கடைசி ஆட்டக்காரரான மொஹம்மத் சிராஜ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

சுழல்பந்துவீச்சாளர் ஷொயெப் பஷிர் வீசிய பந்தை மொஹம்மத் சிராஜ் தடுத்தாடினார். அப்போது முன்னால் வீழ்ந்த பந்தில் ஏற்பட்ட சுழற்சியால் பந்து பின்னோக்கி சென்று இடது விக்கெட்டில் பட சிராஜ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் ரவிந்த்ர ஜடேஜா 181 பந்துகளை எதிர்கொண்டு 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஜொவ்ரா ஆச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 387 (ஜோ ரூட் 104, ப்றைடன் கார்ஸ் 56, ஜெமி ஸ்மித் 51, ஒல்லி போப் 44, பென் ஸ்டோக்ஸ் 44, உதிரிகள் 31, ஜஸ்ப்ரிட் பும்ரா 74 - 5 விக்., நிட்டிஷ் குமார் ரெட்டி 62 - 2 விக்., மொஹம்மத் சிராஜ் 85 - 2 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 387 (கே. எல். ராகுல் 100, ரிஷாப் பான்ட் 74, ரவிந்த்ர ஜடேஜா 72, கருண் நாயர் 40, கிறிஸ் வோக்ஸ் 64 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 52 - 2 விக்., பென் ஸ்டோக்ஸ் 63 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 192 (ஜோ ரூட் 40, பென் ஸ்டோக்ஸ் 33, உதிரிகள் 32, வொஷிங்டன் 22 -  4 விக்., மொஹம்மத் சிராஜ் 31 - 2 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 38 - 2 விக்.)

இந்தியா 2ஆவது இன் - வெற்றி இலக்கு 193 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 170 (ரவிந்த்ர ஜடேஜா 61 ஆ.இ., கே. எல். ராகுல் 39, பென் ஸ்டோக்ஸ் 48 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 55 - 3 விக்., ப்றைடன் கார்ஸ் 30 - 2 விக்.)

ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ் (மொத்தம் 73 ஓட்டங்கள், 5 விக்கெட்கள், ஒரு ரன் அவுட்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-17 23:41:20
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57