கொழும்புத்திட்ட முன்னுரிமை விடயங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

Published By: Vishnu

14 Jul, 2025 | 08:22 PM
image

(நா.தனுஜா)

கொழும்புத்திட்டத்தின் உறுப்புநாடுகள் மத்தியில் நிலைமாற்றமடைந்துவரும் தேவைப்பாடுகளை ஈடுசெய்யக்கூடியவகையில் அத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சரும் கொழும்புத்திட்டத்தின் செயலாளர் நாயகமும் கலந்துரையாடியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் கொழும்புத்திட்டத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி பெஞ்சமின் பி.ரேய்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (14) வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது கொழும்புத்திட்டத்தின் உறுப்புநாடுகள் மத்தியில் நிலைமாற்றமடைந்துவரும் தேவைப்பாடுகளை ஈடுசெய்யக்கூடியவகையில் கொழும்புத்திட்டத்தின் ஊடாக முன்னுரிமை வழங்கப்படவேண்டிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு கொழும்புத்திட்டத்தின்கீழ் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

அதேவேளை இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், 'கொழும்புத்திட்டத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், சுமார் ஏழு தசாப்தங்களாக அதன் செயலகத்தை நிர்வகிக்கும் நாடாகவும் இருப்பதனையிட்டு இலங்கை பெருமையடைகிறது. இது சகலரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் சுபீட்சம் என்பவற்றை அடைந்துகொள்வதில் நாம் கொண்டிருக்கும் ஆழமான கடப்பாட்டைக் காண்பிக்கிறது' எனத் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை உள்ளடங்கலாக சகல உறுப்புநாடுகளும் பயனடையக்கூடியவகையில் கொழும்புத்திட்டத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் இயலுமை மேம்பாடு, போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனை சேவை மற்றும் ஏனைய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52