விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கானஅங்­கு­ரார்ப்­பண ஆசிய கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி தனது முத­லா­வது போட்­டியில் பங்­க­ளா­தேஷை 9 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­கொண்­டது.

கொச்சின், ஜவ­ஹர்லால் நேரு விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இப் போட்­டியில் சக­ல­து­றை­களில் பிர­கா­சித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியின் வெற்­றியில் பெரும் பங்­காற்­றினர்.

பங்­க­ளாதேஷ் அணி 20 ஓவர்­களில் 129 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்கு ஆடிய இலங்கை அணி 13.4 ஓவர்­களில் ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 130 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­பெற்­றது. 56 ஓட்டங்களை பெற்ற சுரங்க சம்பத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.