“ இங்கு முன்பு ஏதோ இருந்தது” (There Was Something Here Before ) என்ற தலைப்பிலான ஸஹிரா அஸ்மால் வழங்கும் கண்காட்சி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இக் கண்காட்சியானது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற நகரமைப்பாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஸஹிரா அஸ்மால் (Zahira Asmal) இனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின், கேப்டவுன் நகரில் அடிமைத்தனம் மற்றும் நகர்ப்புற பாரம்பரியத்தை இக்கண்காட்சி வெளிப்படுத்துகின்றது.
இங்கு முன்பு ஏதோ இருந்தது என்ற கண்காட்சிக்கு இலங்கையிலுள்ள நெதர்லாந்து தூதரகம் ஆதரவு வழங்குகின்றது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள இன்டிபென்டன்ஸ் ஆர்க்கேட்டில் உள்ள மணிக்கூட்டுக்கோபுர கட்டிடத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 10 முதல் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
பொதுமக்கள் இதனை இலவசமாக பார்வையிட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கண்காட்சியுடன் இணைந்து, பத்துக்கும் மேற்பட்ட அரங்கச் செயற்பாடுகள், உரையாடல்கள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் திரைப்பட காட்சிகள் இடம்பெறவுள்ளன.
இவை இலங்கையின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன.
கேப் டவுன் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களின் பூர்வீக காலங்களுக்குள்ள தொடர்பை இவை வெளிப்படுத்தும்.
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் மற்றும் கொழும்பு ஆகிய இரண்டும் முன்னொரு காலத்தில் நெதர்லாந்தின் காலனித்துவத்தின் கீழ் இருந்தன.
பல வியத்தகு மற்றும் மறக்கப்பட்ட வரலாற்றுச் சம்பவங்கள் இக் கண்காட்சியின் மையமாக காணப்படுகின்றன.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையேயான வரலாற்றுச் சங்கிலியைக் காட்டும் இதுபோன்ற கண்காட்சி முதன்முறையாக கொழும்பில் இடம்பெறுகின்றது.
இது ஒரு சர்வதேச கண்காட்சியின் தொடக்கத்தளமாக கொழும்பில் நடைபெறுகிறது.
மேலதிக விபரங்களுக்கு, “There Was Something Here Before - I SEE YOU” இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது @thecityagency என்ற Facebook மற்றும் Instagram பக்கங்களை பார்வையிடவும்.
தொடர்புகளுக்கு மெனகா ராஜபக்ஷ - +94 77 876 0871
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM