எண்ணியவை எல்லாம் எண்ணியபடி நடப்பதில்லை. எம்மில் பலரும் தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்த வகையில் நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் விரிவாக திட்டமிட்டு பணியாற்ற தொடங்குவார்கள். ஆனால் அந்தக் காரியத்தில் வெற்றி கிடைப்பதில்லை அல்லது முழுமையான வெற்றி கிடைப்பதில்லை.
இதற்கான காரணத்தை துல்லியமாக அவதானிக்கும் போது செய்வினை - கண்ணேறு - பில்லி - சூனியம் - என்ற எதிர்மறை சக்திகளின் பங்களிப்பு இருப்பதை கண்டறியும் போது இதிலிருந்து விலகுவதற்கான சூட்சமத்தை உணர்ந்து கொள்ள முடியாமல் தவிப்பார்கள்.
இந்தத் தருணத்தில் எம்முடைய தொடர்ச்சியான மற்றும் சீரான முன்னேற்றத்தில் தடைகளும், தாமதங்களும் தொடர்ந்து ஏற்பட்டால் அதனை நீக்குவதற்கான எளிய பரிகாரத்தையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
தமிழகத்திற்கும், புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமையப்பெற்றிருக்கும் திருவக்கரை எனும் இடத்தில் உள்ள வக்ர காளியம்மன் தரிசிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால வேளையில் இந்த வக்ர காளியம்மனை தரிசித்தால் உங்களது முன்னேற்றத்தில் உங்களுக்குத் தெரியாமல் ஏற்படுத்தி இருக்கும் தடை அகன்று விடும்.
அதே தருணத்தில் இந்த வக்ர காளியம்மனுக்கு.. பாதிக்கப்பட்டவர்கள் என்ன வயதோ அந்த வயது எண்ணிக்கையிலான எலுமிச்சை பழத்தை மாலையாக கட்டி அம்மனுக்கு சாற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது வேண்டுகோளை சமர்ப்பித்தால் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி.
சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்தால்.. உங்கள் வயதுடைய எண்ணிக்கையிலான எலுமிச்சை பழ மாலையை சாற்றுவதுடன், 108 என்ற எண்ணிக்கையிலான நெய் தீபத்தையும் ஏற்றி வழிபட்டால் பிரச்சனையில் தீவிரம் குறைந்து முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.
உடனே எம்மில் சிலர் இங்கிருந்து இந்தியாவிற்கு சென்று திருவக்ர காளியம்மனை தரிசிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பார்கள். ஆனாலும் கண்ணேறு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். இதற்கு என்ன மாற்று உபாயம்? என கேள்வி எழுப்புவார்கள். அதற்கும் எம்முடைய முன்னோர்கள் ஒரு வழியை காண்பித்திருக்கிறார்கள்.
உங்களது வீட்டிற்கு அருகே தனி சன்னதியுடன் இருக்கும் விநாயக பெருமானை தரிசித்து, 'மாய தடைகளை விலக வேண்டும்' என பிரார்த்தனை செய்து 12, 27 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலான தேங்காயை சிதறு காயாக உடைக்க வேண்டும். இந்த தேங்காயை பாதிக்கப்பட்டவர்கள் யாரோ அவர்களே சிதறு காயை உடைக்க வேண்டும்.
அத்துடன் 12 , 27 ,108 என்ற எண்ணிக்கையிலான நெய் தீபத்தையும் ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் மேற்கொண்டால் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருந்த மாய தடை விலகும். முன்னேற்றத்திற்கான பாதை புலப்பட தொடங்கும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM