பான் இந்திய நட்சத்திர நடிகரான சிவராஜ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றப் பார்வையை படக் குழுவினர் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உற்சாகத்துடன் வெளியிட்டுள்ளனர்.
'இடி மின்னல் காதல் 'படத்தை தயாரித்து இயக்கிய இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
எக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா - கிருஷ்ணகுமார். பி -சாகர் ஷா - ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் சிவராஜ் குமார் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கினை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த போஸ்டரில் பேருந்து ஒன்று இடம்பிடித்திருப்பதும், இந்த திரைப்படம் புலனாய்வு சம்பந்தப்பட்ட விறுவிறுப்பான திரைக்கதையாக தயாராகிறது என்பதும், இந்தப் படத்தின் டைட்டில் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பும் இடம்பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM