”முஸ்லிம் பெண்களின் கதைகள்” என்பது, முஸ்லிம் கலைஞர்களின் படைப்புகளை ஒன்றிணைத்து இலங்கை முஸ்லிம் பெண்களின் பாலின அனுபவங்களை, காட்சி மற்றும் உரை கதைசொல்லல் மூலம் ஆராயும் இரண்டு நாள் கண்காட்சியாகும்.
இந்தக் கண்காட்சி ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மருதானையில் உள்ள முஸ்லிம் பெண்கள் கற்கை வட்ட மண்டபத்தில் நடைபெறும்.
முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை அனுபவங்களின் ஆழத்தை இக் கண்காட்சியானது ஆராய்கிறது- சுமந்த சுமைகள், தனக்குள் உருவான நிலைத்தன்மை, கடந்து வந்த போராட்டங்கள் மற்றும் திணிக்கப்பட்டவற்றை தாண்டி அடையாளத்தை கட்டியெழுப்பும் அவர்களின் வழி முறைகள் தொடர்பில் ஆராய்கிறது. இந்தக் கண்காட்சி இஸ்லாத்தில் பெண்களின் இடத்தைப் பிரதிபலிப்பதோடு, அவர்களின் வரலாற்று செல்வாக்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்கள் முதலான இரண்டையும் எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த கண்காட்சியானது, மரபுரீதியாக அல்லது விதிக்கப்பட்ட பாத்திரங்களுக்கு அப்பால் பெண்கள் தங்கள் அடையாளங்களை மீட்டெடுக்கவும் மறுவரையறை செய்யவும் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது.
சக்திவாய்ந்த படங்கள் மற்றும் கதைகளுடன் பார்வையாளர்கள் இணைந்துகொள்ளவும், இன்றைய முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையின் வளர்ந்து வரும் யதார்த்தங்களைப் பற்றி சிந்திக்கவும் நாம் அனைவரையும் அழைக்கிறோம். இந்தக் கண்காட்சியானது பதுரு சர்வதேச கலாச்சார விழாவின் (Baturu International Cultural Festival) நிதியளிப்பில், எவ்ரிஸ்டோரியினால் (Everystory) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சி விவரங்கள்:
திகதி: 16–17 ஜூலை, 2025
நேரம்: காலை 8:30 – மாலை 6:30
இடம்: முஸ்லிம் பெண்கள் கற்கை வட்ட மண்டபம், 201, டி ஆர் விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10
உள்நுழைவு: அனைவருக்கும் நுழைவு இலவசம்
தொடர்பு மற்றும் சமூக ஊடகங்கள்
மின்னஞ்சல்: info@everystorysl.org
இன்ஸ்டாகிராம்: @everystory.sl
முகநூல்: @Everystory.SL
லிங்க்டின்: Everystory Sri Lanka
இணையதளம்: www.everystorysl.org
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM