விவாகரத்து பெற்றதை 40 லீற்றர் பாலில் குளித்து மகிழ்ச்சியில் திளைத்த கணவன் - அசாம் மாநிலத்தில் சம்பவம்!

Published By: Digital Desk 2

14 Jul, 2025 | 12:12 PM
image

இந்தியாவின் அசாம் மாநிலத்தின் உள்ள பரலியாபார் கிராமத்தின் முகல்முவா பொலிஸ் பிரிவில், தனது விவாகரத்தை கொண்டாடிய மணிக் அலி என்பவர் சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது, 

மணிக் அலியின் மனைவி பல முறை தகாத உறவில் ஈடுபட்டு, குடும்பத்தை பலமுறை கைவிட்ட நிலையில், மனைவியின் செயல்களால் மனமுடைந்த அலி, விவாகரத்து கோரி வழக்குத் தொடர முடிவு செய்து, பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார். 

இருந்த போதிலும்,அவர் தனது மகளுக்காக மனைவியுடன் மீண்டும் இணைய முயற்சித்திருந்தார். ஆனால் தனது மனைவி மீண்டும் தகாத உறவுகளில் ஈடுபடுட்டு வந்ததால், மனமுடைந்த அவர் விவாகரத்திற்காக மனு தாக்கல் செய்து, சட்டப்படி பிரிந்துள்ளார்.

விவாகரத்துக்குப் பின்னர்,  "இனிமேல் நான் சுதந்திரமானவன்" என்று கூறி , 40 லீற்றர் பாலை தன்னுடைய உடலில் ஊற்றி, வெள்ளை சட்டை, நீல நிற நீளக் காட்சட்டை அணிந்த நிலையில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமிலும் பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி, 3 மில்லியனைத் தாண்டும் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பலரும் இதற்கான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். சிலர் “நல்ல தீர்மானம்” எனக் கூறுகின்றனர், மற்றும் சிலர் பாலை வீணடித்ததற்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17