'பத்ம ஸ்ரீ', 'பத்மபூஷன்' ஆகிய இந்திய அரசு வழங்கும் உயர்ந்த விருதுகளை வென்ற பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார். 87 வயதாகும் அவருக்கு உடல்நல குறைவு காரணமாக அவரது இல்லத்திலேயே திங்கட்கிழமை (14) காலமானார்.
கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான சரோஜாதேவி 1956 ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் உருவாகி வெளியான ' திருமணம்' எனும் படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'தங்க மலை ரகசியம் ' எனும் திரைப்படத்திலும் அவர் யவனமோகினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான 'நாடோடி மன்னன்' எனும் திரைப்படத்தில் முதன்முறையாக எம்ஜிஆர் உடன் ஜோடி சேர்ந்து அவர் நடித்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான 'திருடாதே', 'தாய் சொல்லை தட்டாதே', 'மாடப்புறா',' தாயைக் காத்த தனயன்', 'குடும்பத் தலைவன்', 'பாசம்', 'பணத்தோட்டம்', 'நீதிக்குப் பின் பாசம்', 'தர்மம் தலைகாக்கும்', 'பெரிய இடத்துப் பெண்', 'என் கடமை', 'பணக்கார குடும்பம்', 'தெய்வத்தாய்', 'படகோட்டி ', 'தாயின் மடியில்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'கலங்கரை விளக்கம்', 'ஆசை முகம்', 'அன்பே வா', 'நான் ஆணையிட்டால்', 'நாடோடி', 'பறக்கும் பாவை', 'தாலி பாக்கியம்', 'பெற்றால்தான் பிள்ளையா', 'அரச கட்டளை' என 25க்கும் மேற்பட்ட படங்களில் எம்ஜிஆர் உடன் நடித்து தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
நடிகை சரோஜாதேவி 'தங்கமலை ரகசியம்' படத்தை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து 'சபாஷ் மீனா', 'பாக பிரிவினை', 'விடிவெள்ளி', 'இரும்பு திரை', 'பாலும் பழமும்',' வளர்பிறை', 'பார்த்தால் பசி தீரும்',' ஆலயமணி ', 'இருவர் உள்ளம்', 'குல மகள் ராதை', 'கல்யாணியின் கணவன்', 'புதிய பறவை', 'என் தம்பி ', 'அன்பளிப்பு', 'அஞ்சல் பெட்டி 520', 'தேனும் பாலும்', 'அருணோதயம்', 'பாரம்பரியம்', 'ஒன்ஸ்மோர்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழில் சூர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டில் வெளியான 'ஆதவன்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும்.
இதற்குப் பின் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கோடீஸ்வரி' எனும் நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார்.
தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
சரோஜாதேவி கன்னட நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும் அவருடைய திரையுலக பயணத்தில் 25- 50 -75 - 100 -150 - 175 ஆவது படங்கள் எல்லாம் தமிழில் தான் நடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சரோஜா தேவியின் மறைவிற்கு தமிழக திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளங்களின் மூலமாகவும் , நேரடியாகவும் தெரிவித்து வருகிறார்கள்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM