இன்றைய வானிலை

14 Jul, 2025 | 06:09 AM
image

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் சப்ரகமுவ, மேல்,வடமத்திய , வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம்  காலி ஊடாக மாத்தறை வரையான கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்   மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50  km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37