கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

Published By: Vishnu

14 Jul, 2025 | 02:58 AM
image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 25 மற்றும் 35 வயதுடைய இருவரே சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீரிகம-பஸ்யால பிரதான வீதியின் மல்லேஹெவ பிரதேசத்தில்13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மீரிகவிலிருந்து பஸ்யால நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்,  எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார்சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்த நபரும் வதுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

25 மற்றும் 35 வயதுடைய அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பல்லெவேல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30