லோர்ட்ஸ்  டெஸ்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 135 ஓட்டங்களும் இங்கிலாந்துக்கு 6 விக்கெட்களும் தேவை

Published By: Vishnu

14 Jul, 2025 | 01:49 AM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்டவண்ணம் இருக்கிறது.

இந்தப் போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (13) 248 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

3 நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

193 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

கே.எல். ராகுல் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (0), கருண் நாயர் (14), அணித் தலைவர் ஷுப்மான் கில் (6), இராக்காப்பாளன் ஆகாஷ் தீப் (1) ஆகிய நால்வரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 135 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன் இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள் தேவைப்படுகிறது.

முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளும் 387 ஓட்டங்கள் என்ற ஒரே மொத்த எண்ணிக்கையைப் பெற்றதுடன், போட்டியின் 3ஆம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஜோ ரூட் 40 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 33 ஓட்டங்களையும் ஹெரி ப்று{க் 23 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

சுழல் பந்துவீச்சாளர் வொஷிங்டன் சுந்தர் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 12.1 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர்...

2026-07-16 15:04:06
news-image

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டுவந்து இங்கிலாந்தை...

2026-07-16 09:29:57
news-image

இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு...

2026-07-15 20:55:07
news-image

இறுதிப் போட்டிக்கு குறிவைத்து  உலகக் கிண்ண...

2026-07-15 19:34:55
news-image

MCA T10 கிண்ணத்தை கைப்பற்றிய சிட்டிசன்ஸ்...

2026-07-15 17:03:21
news-image

பிரான்ஸை எளிதாக வெளியேற்றிய ஸ்பெய்ன் உலகக்...

2026-07-15 09:45:43
news-image

ஐரோப்பிய பலவான்கள் பிரான்ஸ் - ஸ்பெய்ன்...

2026-07-14 21:51:19