(நெவில் அன்தனி)
ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 83 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிகொண்ட பங்களாதேஷ், தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

இப் போட்டியில் சகலதுறைகளிலும் இலங்கை பிரகாசிக்கத் தவறியதுடன் துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்க ளைப் பெற்றனர்.
லிட்டன் தாஸ், ஷமின் ஹொசெய்ன் ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டங்களும் ரிஷாத் ஹொசெய்னின் துல்லியமான பந்துவீச்சும் பங்களாதேஷை வெற்றி அடையச் செய்தன.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட178 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 15.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 94 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மோசமான தோல்வியைத தழுவியது.
ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க, தசுன் ஷானக்க ஆகிய இருவரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
குசல் மெண்டிஸ் (8) குசல் பெரேரா (0), அவிஷ்க பெர்னாண்டோ (2), சரித் அசலன்க (5) ஆகிய நால்வரும் துடுப்பாட்டத்தில் சோடை போயினர். (30 - 4 விக்.)

இந் நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் தசுன் ஷானக்கவும் அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 41 ஓட்டங்களே இலங்கையின் மிகச் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.
பெத்தும் நிஸ்ஸன்க 32 ஓட்டங்களையும் தசுன் ஷான்க 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
மத்திய மற்றும் பின்வரிசையில் மூவர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் ரிஷாத் ஹொசெய்ன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொரிபுல் இஸ்லாம் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சய்புதின் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷின் முதல் 2 விக்கெட்கள் 7 ஓட்டங்களுக்குள் வீழ்த்தன.
ஆனால், அணித் தலைவர் லிட்டன் தாஸ், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
தௌஹித் ஹிரிதோய் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.
இந் நிலையில் லிட்டன் தாஸ், ஷமிம் ஹொசெய்ன் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
லிட்டன் தாஸ் 50 பந்துகளில் ஒரு பவுண்டறி, 5 சிக்ஸ்களுடன் 76 ஓட்டங்களைப் பெற்றார்.
உபாதையிலிருந்து மீண்டு வந்து ஜாக்கர் அலி 3 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷமிம் ஹொசெய்ன் 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 48 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்தவீச்சில் பினுர பெர்னாண்டோ 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: லிட்டன் தாஸ்
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM