யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Vishnu

13 Jul, 2025 | 09:20 PM
image

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி பொலிஸார் , யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அதன் போது , வீதியில் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்தனர். அதன் போது வாகனத்தினுள் ஆற்று மணல் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட வேளை , மணல் எடுத்து செல்வதற்கு வழங்கப்பட்டதாக அனுமதி பத்திரம் ஒன்றினை சாரதிகள் பொலிசாரிடம் கையளித்துள்ளனர். 

அவற்றினை பொலிஸார் சோதனை செய்த போது , அவை போலியான அனுமதி பத்திரம் என்பதனை பொலிஸார் கண்டறிந்து , மணல் கடத்தி சென்ற குற்றச்சாட்டில் இரு சாரதிகளையும் கைது செய்தனர். 

அதேவேளை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனத்தினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர். 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் நிர்வாக, ஊழல் ஒழிப்பு நடவடிக்கை...

2026-07-22 18:14:00
news-image

ஜப்பான் அரசின் கடன் உதவித் திட்டத்தின்...

2026-07-22 12:54:12
news-image

இலங்கை பட்டய ஊடகவியலாளர் நிறுவனத்தை உருவாக்கும்...

2026-07-22 17:34:35
news-image

காய்ச்சல் ஏற்பட்டால் காலம் தாமதிக்காமல் உடனடியாக...

2026-07-22 14:18:56
news-image

ஜனாதிபதி மாளிகைகளை பயனுள்ள முறையில் பயன்படுத்த...

2026-07-22 14:50:18
news-image

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை...

2026-07-22 14:49:18
news-image

புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கட்டண நிர்ணயத்துக்கான மக்கள்...

2026-07-22 14:52:16
news-image

புகையிரத சேவையை நவீனமயமாக்க 2027–2029 அபிவிருத்தித்...

2026-07-22 23:07:26
news-image

வடிகாண்களை மக்கள் அபகரித்து தடைகளை ஏற்படுத்துவதால்...

2026-07-22 15:49:49
news-image

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு, 106 பேர்...

2026-07-22 14:52:40
news-image

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள்...

2026-07-22 16:01:58
news-image

சஜித் - ரணில் பங்கேற்புடன் நாளை...

2026-07-22 16:02:17