வவுனியாவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நேரியகுளம் பகுதியில் வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது. 

இதன்போது இளைஞன் தனது கையிலிருந்த தலைக்கவசத்தினால் வயோதிபர் மீது தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு வயோதிபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மாங்குளம் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய  சிமைல் தாம்டீன் என்ற tயோதிபராவார். இதேவேளை வயோதிபர் மீது தாக்குதல் நடத்தியவர்  அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

 தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.