திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின் வெளியீடும் ; கலைக்கேசரி விருது வழங்கும் நிகழ்வும்!

13 Jul, 2025 | 04:31 PM
image

திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்களின் 'தூரத்து விண்மீனை கண்டேன்', 'விழிகளில் ஒரு வானவில்' ஆகிய இருநூல்கள் சனிக்கிழமை (12 ) வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு, திருகோணமலை மாநகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் பிற்பகல் 03.00 மணியளவில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக திருகோணமலை மாநகராட்சி மன்றத்தின் மேயர் க.செல்வராஜா (சுப்ரா), சிறப்பு விருந்தினராக திருகோணமலை தமிழ் சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் திருமலை நவம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

இந்நிகழ்வில், விசேட உரையை வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர்,  ஊடகவியலாளர்   சரவணபவானந்தம் திருச்செந்தூரன் நிகழ்த்தினார்.

நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை கலாநிதி ஸ்ரீ ஞானேஸ்வரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட கலை, இலக்கியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல வருட காலம் சேவையாற்றிய சிவஸ்ரீ அ.அரசரெத்தினம், பி.ரி.அஸீஸ், வே.சரவணபவ ஆனந்தம், விக்கி நவரட்ணம், ப.மதிபாலசிங்கம் ஆகியோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40
news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31